AUS vs BAN : பந்துவீச்சில் நாங்கள் செய்த இந்த தவறே தோல்விக்கு காரணம் – மோர்தசா

உலககோப்பைத் தொடரின் 26வது போட்டி நேற்று நாட்டிங்ஹாம் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், மோர்தசா தலைமையிலான வங்கதேச அணியும்

Mortaza
- Advertisement -

உலககோப்பைத் தொடரின் 26வது போட்டி நேற்று நாட்டிங்ஹாம் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், மோர்தசா தலைமையிலான வங்கதேச அணியும் மோதின.

aus ban

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 381 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வார்னர் 166 ரன்கள் அடித்தார். கவாஜா 89 ரன்கள் குவித்தார்.

பின்னர் 382 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 333 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ரஹீம் 102 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

aus

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய வங்கதேச அணியின் கேப்டன் மோர்தசா கூறியதாவது : நாங்கள் 40 முதல் 50 ரன்களை பந்து வீச்சின்போது அதிகமாக கொடுத்து விட்டோம். இல்லையென்றால் இந்த ரன்களை கண்டிப்பாக துரத்தி வெற்றி பெற்றிருக்க முடியும் என்று நம்புகிறேன். இந்த போட்டியில் ஆஸ்திரரேலிய அணியின் வெற்றிக்கு காரணம் வார்னர் மற்றும் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள்.

warner

அவர்கள் விரைவாக ஆடி ரன்களை சேர்த்தனர். எங்கள் அணியும் சிறப்பாக பேட்டிங் செய்து துரத்தியது ஒவ்வொரு போட்டியிலும் நாம் வெற்றியை தேடி செல்கிறோம். ஆனால் எப்போதும் வெற்றி கிடைப்பது இல்லை அதற்காக காத்திருக்கும் வேண்டும் அதுவும் அவசியம் என்று மோர்தசா கூறினார்.

Advertisement