Bangladesh : உலகக்கோப்பை தொடருடன் நான் ஓய்வு பெறப்போகிறேன் – மோர்டாசா

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

Mortaza
- Advertisement -

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Mortaza 1

இந்நிலையில் பங்களாதேஷ் அணியின் கேப்டன் மோர்டாசா தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது : நான் எனது அணிக்காக பல ஆண்டுகளாக கேப்டன் பொறுப்பை ஏற்று செயல்பட்டுவந்தேன். தற்போது எனக்கு 35 வயது ஆகிறது. மேலும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நான் வெற்றி பெற்றதால் எனக்கு வேலை பளுவும் அதிகமாகியுள்ளது. எனவே நான் தற்போது ஓய்வினை எடுக்க விரும்புகிறேன்.

- Advertisement -

இந்த உலகக்கோப்பையுடன் நான் ஓய்வு பெறவிரும்புகிறேன். தற்போது எங்கள் அணி நல்ல நிலையில் உள்ளது. மேலும், பல முன்னணி அணிகளுக்கு சவால் அளிக்கும் வகையில் சிறப்பாகவும் ஆடிவருகிறது. இந்த உலகக்கோப்பையில் நாங்கள் நிச்சயம் எங்களால் முடிந்த அளவு சிறப்பான ஆட்டத்தை அளிப்போம். இதனால் வரை எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் மற்றும் என் ரசிகர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என்று தெரிவித்தார்.

Mortaza 2

மோர்டாசா இதுவரை 205 போட்டிகளில் பங்கேற்று 259 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், 36 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 78 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் இவரது கேப்டன்சியில் பங்களாதேஷ் பல தொடர்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement