- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வைபவ் சூர்யவன்ஷிக்காக அந்த 2 பேரை எங்களால் ஏமாற்ற முடியாது.. அவசர முடிவு வேணாம் – மோர்கல் பேட்டி

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கனவே அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இழந்த இந்திய அணி இம்முறை இங்கிலாந்து மண்ணில் வெற்றி பெற்று அந்த தோல்விக்கு பழிதீர்க்கும் முனைப்புடன் விளையாடி வருகிறது.

வைபவ் சூர்யவன்ஷியின் வாய்ப்பு குறித்து பேசிய : மோர்னே மோர்கல்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட வேளையில் இன்று இரண்டாவது போட்டியானது நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்காக அறிமுகமாக வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது.

- Advertisement -

ஏனெனில் கடந்த சில போட்டிகளாகவே சஞ்சு சாம்சன் சொதப்பி வருவதால் அவருக்கு பதிலாக வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாக வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனால் இளம் வீரரான இவரை தாண்டி அனுபவ வீரரான சஞ்சு சாம்சனுக்கு அதிக ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கல் வைபவ் சூர்யவன்ஷியின் வாய்ப்பு குறித்து சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : டி20 போட்டிகளை பொருத்தவரை முதன்மை பேட்ஸ்மேனாக அபிஷேக் சர்மா இருக்கிறார். உலககோப்பை நாயகனாக சஞ்சு சாம்சன் இருக்கிறார். நாட்டுக்காக பங்களித்த வீரர்களுக்கு ஆதரவாக இருப்பது தான் பயிற்சியாளராக எங்களுக்கு இருக்கும் ஒரு கடமை.

- Advertisement -

இதையும் படிங்க : சச்சின், கோலி மாதிரி வைபவ் சூர்யவன்ஷியும் இதை நிரூபிக்கணும் – கபில் தேவ் அறிவுரை

புதிய வீரர் வாய்ப்புக்காக கதவை தட்டுவது மகிழ்ச்சி தான். ஆனாலும் தற்போதுள்ள வீரர்களை நாம் ஆதரிக்க வேண்டும். இல்லையெனில் அவர்களது நம்பிக்கை குலையும். அதுபோன்ற அவசர முடிவுகளை நாங்கள் எடுக்க மாட்டோம் என்றும் மோர்னே மோர்கல் கூறியுள்ளார். இதன்மூலம் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாவதில் இன்னும் தாமதம் ஏற்படும் என்பது உறுதியாகியுள்ளது.

- Advertisement -