- Advertisement -
ஆசிய கோப்பை

ஆசிய கோப்பை தொடரில் ஷிவம் துபேவிற்கு மிகப்பெரிய ரோல் இருக்கு.. ஹின்ட் கொடுத்த – மோர்னே மோர்கல்

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் ஹாங்காங் ஆகிய எட்டு நாடுகள் பங்கேற்று விளையாட இருக்கும் 17-ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று செப்டம்பர் 9-ஆம் தேதி கோலாகலமாக துவங்க இருக்கிறது. செப்டம்பர் 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

ஷிவம் துபேவிற்கு மிகப்பெரிய ரோல் இருக்கு : மோர்னே மோர்கல்

இந்த தொடரின் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணியானது தங்களது முதலாவது லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்த்து நாளை செப்டம்பர் 10-ஆம் தேதி துபாய் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இதன் காரணமாக தற்போது சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரின் போது இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போதைய இந்திய டி20 அணியில் ஆல்ரவுண்டர்களுக்கு பெரிய முக்கியத்துவம் அளிப்பதால் பிளேயிங் லெவனில் ஹார்டிக் பாண்டியா, ஷிவம் துபே மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக ஷிவம் துபேவை நாங்கள் ஒரு முழுமையான ஆல்ரவுண்டாக பயன்படுத்த இருக்கிறோம் என இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கல் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

என்னை பொறுத்தவரை ஷிவம் துபே போன்ற ஆல்ரவுண்டர்கள் டி20 போட்டிகளில் நான்கு ஓவர்களையும் முழுமையாக வீசுவது அவசியம். அதனால் எப்பொழுதுமே அவரை பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு பயிற்சிகளிலுமே உழைக்குமாறு அறிவுறுத்தி வருகிறேன். ஒரு ஆல்ரவுண்டராக முழு திறமையை வெளிப்படுத்த வேண்டுமென்றால் இரு துறையிலும் நேரத்தை செலவிடுவது அவசியம்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை தொடரில் அர்ஷ்தீப் சிங்கிற்கு கண்டிப்பா இந்த சவால் இருக்கும் – பரத் அருண் பேட்டி

அந்த வகையில் தற்போது ஷிவம் துபேவிற்கு பேட்டிங்கிற்கு சமமான பந்துவீச்சு பயிற்சியையும் நாங்கள் கொடுத்து வருகிறோம். அவர் இந்த ஆசிய கோப்பை தொடரில் ஒரு முக்கியமான ஆல்ரவுண்டராக அவரது ரோலை செய்யப்போகிறார் என்றும் மோர்னே மோர்கல் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -