ராணா மாதிரி எல்லாத்தையும் கம்பீர் தான் முடிவெடுப்பாரு.. எனக்கும் அதுக்கும் சம்மந்தமில்ல.. மோர்கெல் வெளிப்படை

Morne Morkel
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 0 – 2 (2) என்ற கணக்கில் சொந்த மண்ணில் படுதோல்வியைச் சந்தித்தது. அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடரிலாவது வெற்றி பெற்று சொந்த மண்ணில் இந்திய அணி தங்களுடைய மானத்தைக் காப்பாற்றுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் தோல்விக்கு பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சோதனை என்ற பெயரில் செய்த மாற்றங்களும் தவறான தேர்வுகளும் முக்கிய காரணமானது. அதே போல ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலும் அவர் ஹர்ஷித் ராணாவுக்கு அதிகப்படியான வாய்ப்புகளை வழங்கி வருகிறார். அந்த வாய்ப்பில் ராணா இதுவரை பெரியளவில் சிறப்பாக விளையாடவில்லை.

- Advertisement -

எனக்கு சம்மந்தம் இல்ல:

அதனால் ஹர்ஷித் ராணாவின் தேர்வு பற்றி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் விமர்சித்தனர். அது பற்றி கேட்டதற்கு ராணா போன்ற 23 வயது குழந்தையை விமர்சிப்பது வெட்கக்கேடானது என்று கௌதம் கம்பீர் பதிலடி கொடுத்தார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் தொடரிலும் ஹர்சித் ராணாவுக்கு அவர் தொடர்ந்து வாய்ப்பளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் எதன் அடிப்படையில் ராணா போன்ற பவுலர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கிறீர்கள்? என்று இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கெலிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு இந்திய அணியில் பவுலர்களை தேர்ந்தெடுப்பதற்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்று மோர்கெல் பதிலளித்தார். அவை அனைத்தையும் கௌதம் கம்பீர் முடிவெடுப்பதாக தெரிவிக்கும் அவர் தேர்ந்தெடுக்கும் வீரர்களுக்கு பயிற்சியளிப்பது மட்டுமே தம்முடைய வேலை என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

- Advertisement -

மோர்கெல் வெளிப்படை:

இது பற்றி மோர்கெல் பேசியது பின்வருமாறு. “உண்மையிலேயே நான் வீரர்களின் தேர்வு மற்றும் அது சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடுவதில்லை. அதை நான் கௌதம், தேர்வாளர்கள் மற்றும் கேப்டன் ஆகியோரிடம் விட்டு விடுகிறேன். எனவே அது பற்றி என்னால் கருத்து சொல்ல முடியாது. ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடர் நல்ல வாய்ப்பாக இருக்கும்”

இதையும் படிங்க: 3 ஃபார்மெட்டிலும் சதம்.. ரோஹித் சர்மாவின் உலக சாதனையை உடைத்த ஆயுஷ் மாத்ரே.. புதிய சாதனை

“நாங்கள் எப்போதும் இந்த வீரர்களுக்கு போதுமான போட்டி நேரத்தை வழங்கப் பார்க்கிறோம். அவர்கள் சில ஆக்ரோஷமான பேட்ஸ்மேன்களுக்கு எதிராக விளையாடுவார்கள். எனவே இது கடினமான சூழ்நிலைகளில் அவர்கள் தங்களைத் தாங்களே சோதித்து கொள்வதற்கு நல்ல வாய்ப்பாகும். இந்தத் தொடரில் அவர்கள் நன்றாக விளையாடுவார்கள் என்ற உற்சாகத்துடன் நான் காத்திருக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement