பஸ்பால் இங்கிலாந்துக்கு பயந்து இந்தியா லேட்டாக டிக்ளேர் செய்ததா? ஹாரி ப்ரூக் சாவல் பற்றி மோர்கெல் பதில்

Morne Morkel
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்கம் நகரில் நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற 608 என்ற இமாலய இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது. ஜூலை இரண்டாம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 587, 426/7 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 269, 161 ரன்களை குவித்து அசத்தினார். அதே போல இரண்டாவதாக விளையாடிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 407 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கடைசியில் 608 ரன்களை துரத்தும் அந்த அணி 4வது நாள் முடிவில் 72/3 என தடுமாறி வருவதால் இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

பஸ்பால் பயமா:

முன்னதாக பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக வந்தது முதல் பஸ்பால் என்ற பெயரில் அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து சொந்த மண்ணில் 350+ ரன்களை எளிதாக சேசிங் செய்து வெற்றி கண்டு வருகிறது. கடந்த போட்டியில் கூட 371 ரன்களை எளிதாக துரத்திய இங்கிலாந்து அணி இந்தியாவை தோற்கடித்து இத்தொடரில் முன்னிலை வகிக்கிறது. அதன் காரணமாக 371 அல்ல 450, 500 உட்பட இந்தியா எந்த இலக்கை நிர்ணயித்தாலும் அதை இங்கிலாந்து சேசிங் செய்யும் என்று ஹாரி ப்ரூக் சவால் விடுத்திருந்தார்.

அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் இந்தியா 500க்கும் மேற்பட்ட ரன்களை முன்னிலையாகப் பெற்றதும் டிக்ளேர் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து விளையாடிய இந்தியா 608 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதனால் பஸ்பாலுக்கு பயந்து இந்தியா எக்ஸ்ட்ரா இலக்கை நிர்ணயித்துள்ளதாக இங்கிலாந்து ரசிகர்கள் பேசுகின்றனர்.

- Advertisement -

பயம்’லாம் ஒன்னுமில்ல:

இந்நிலையில் இந்தியா தாமதமாக டிக்ளேர் செய்தது பற்றி பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் விளக்கியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்து பற்றி இந்தியாவுக்கு கவலையா? உண்மையில் இல்லை. ஒரு அணி கடைசி நாளில் 500+ ரன்கள் அடித்தால் அவர்கள் வெற்றிக்குத் தகுதியானவர்கள். எங்களைப் பொறுத்த வரை கொஞ்சம் அதிக நேரமும் ரன்களையும் எடுக்க விரும்பினோம்”

இதையும் படிங்க: ஜஸ்ட் மிஸ்.. ரோஹித் சர்மாவின் உலக சாதனையை அருகில் சென்று தவறவிட்ட சுப்மன் கில் – விவரம் இதோ

“டிக்ளரேஷன் பற்றி நாங்கள் பேசினோம். இப்போதும் பிட்ச் நன்றாக இருக்கிறது. இங்கிலாந்து 4 – 5 ரன்ரேட்டில் விளையாடுகிறார்கள். வானிலையை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. எனவே 4வது நாளில் 20 – 25 ஓவர்களை இங்கிலாந்துக்கு வழங்கி சில விக்கெட்டுகள் எடுத்தாலே அது எங்களுக்கு போனஸ் என்று நினைத்தோம். 5வது நாள் முழுமையாக இருப்பதால் இங்கிலாந்துக்கு 4வது நாளில் ஒரு மணி நேரம் கொடுத்தால் போதும் என்று நினைத்தோம். எந்த இலக்கை கொடுத்தாலும் நாங்கள் சேசிங் செய்வோம் என்று இங்கிலாந்து நேற்றைய நாள் மாலையில் சொன்னார்கள். எனவே கடைசி நாள் சுவாரசியமாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement