காயமடைந்த பாண்டியா மற்றும் அபிஷேக் ஆகியோர் பைனலில் விளையாடுவார்களா? – மோர்னே மோர்கல் பதில்

Morne Morkel
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக செப்டம்பர் 26-ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற சூப்பர் போர் சுற்றின் கடைசி ஆட்டத்தில் பங்கேற்று விளையாடியிருந்த இந்திய அணியின் வீரர்களான ஹார்டிக் பாண்டியா மற்றும் அபிஷேக் ஷர்மா போட்டியின் போது காயமடைந்து வெளியேறியதனால் அவர்கள் ஆசிய கோப்பை தொடரில் மாபெரும் இறுதிப் போட்டியில் விளையாடுவார்களா? என்ற கேள்வி பலரது மத்தியிலும் எழுந்துள்ளது.

பாண்டியா மற்றும் அபிஷேக் ஆகியோரது காயம் குறித்து பேசிய : மோர்னே மோர்கல்

நேற்று இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 31 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 61 ரன்கள் குவித்து அசத்தினார். அதன் பின்னர் இரண்டாம் பாதியில் பீல்டிங் செய்த அவர் போட்டியின் 9 ஓவரின் 2-ஆவது பந்தின் போது ஏற்பட்ட காயம் காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

- Advertisement -

அதேபோன்று மற்றொரு நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா பேட்டிங்கில் 2 ரன்களை மட்டுமே எடுத்து ஏமாற்றத்தை அளித்திருந்தாலும் பந்துவீச்சின் போது முதல் ஓவரை வீசி 7 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தியிருந்தார். ஆனால் அதன் பின்னர் ஏற்பட்ட காயம் காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறிய அவர் மீண்டும் போட்டிக்கு திரும்பவே இல்லை.

இதன் காரணமாக இவர்கள் இருவரும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெற இருக்கும் மாபெரும் இறுதிப்போட்டியில் விளையாடுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கல் தெளிவான விளக்கங்களை அளித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : ஹார்திக் பாண்டியா மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதன் காரணமாகவே மைதானத்தில் இருந்து வெளியேறினார்கள்.

- Advertisement -

அவர்கள் இருவருமே போட்டி நாளான செப்டம்பர் 28-ஆம் தேதி காலை பயிற்சியில் கலந்து கொள்வார்கள். அபிஷேக் ஷர்மா தற்போது நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறார். அதேவேளையில் ஹார்டிக் பாண்டியா பயிற்சியின் போது எவ்வாறு செயல்படுகிறார் என்பதை பார்க்க விரும்புகிறோம். இருவருமே தற்போது நல்ல நிலையிலே இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : தல தோனியின் சாதனையை தகர்த்து முதலிடத்திற்கு சென்ற சஞ்சு சாம்சன் – அப்படி என்ன சாதனை தெரியுமா?

இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்து நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறோம். இறுதிப் போட்டியிலும் நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்கிற நம்பிக்கை உள்ளதாக மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்தின் மூலம் அவர்கள் இருவருக்குமே சிறிய அளவிலான தசைப்பிடிப்பு மட்டுமே ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நிச்சயம் அவர்கள் இறுதிப்போட்டியில் விளையாடுவார்கள் என்றே தெரிகிறது.

Advertisement