இந்திய அணியை வீழ்த்த வேண்டுமென்றால் இதை செய்தால் மட்டுமே முடியும் – மோர்கன் வெளிப்படை

Morgan

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி புனே மைதானத்தில் நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 317 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் ஷிகர் தவான் 98 ரன்களையும், விராட்கோலி 56 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

Dhawan 1

இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ராகுல் 62 ரன்களையும், க்ருனால் பாண்டியா 58 ரன்களும் குவித்தனர். அதைத் தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணி 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 42.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் பேர்ஸ்டோ 94 ரன்களும், ஜேசன் ராய் 46 ரன்களும் குவித்தனர்.

இதனால் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்திய அணி சார்பாக அறிமுக வீரரான பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

thakur

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் சரியான விடயங்களை நிறைய செய்திருக்கிறோம். இந்த மைதானம் சிறப்பாக இருந்ததால் இது ஒரு நல்ல என்டர்டைன்மென்ட் போட்டியாக அமைந்தது. எங்களது பந்து வீச்சுக்கு எதிராக இந்திய அணி சிறப்பாக ரன்களை குவித்தனர். மீண்டும் ஒருமுறை எங்களது பேட்டிங்கில் ஏற்பட்ட தவறு காரணமாக இந்த தோல்வி ஏற்பட்டுள்ளது. இன்றைய போட்டியில் விளையாடியதை விட பேட்டிங்கில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய அணியை வீழ்த்த முடியும்.

- Advertisement -

ind

எங்களுடைய பேட்டிங் ஆர்டரில் முதல் ஏழு நபர்களை பார்த்தால் அதிரடியாக விளையாடி சதங்களை குவிக்க கூடியவர்கள். மேலும் அதிரடியாக நாங்கள் விளையாட விரும்புகிறோம். ஆனால் அது சில சமயங்களில் நடக்காமல் போகிறது. இனிவரும் போட்டிகளில் நாங்கள் சிறப்பாக செயல்பட விரும்புகிறோம். இந்த போட்டியில் எங்களது பவுலர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நாங்கள் பேட்டிங்கில் செய்த தவறு எங்களது தோல்விக்கு காரணம் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.