நாங்கள் ஜெயித்தாலும் இறுதிப்போட்டியின் முடிவு நியாயமல்ல – மனம் திறந்த மோர்கன்

Morgan
- Advertisement -

12வது உலக கோப்பை தொடர் கடந்த 14 ஆம் தேதியோடு முடிவடைந்து. பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் ஒரு வழியாக விதிமுறைகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முதன் முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.

England

- Advertisement -

பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் இரு அணிகளும் 241 ரன்கள் குவித்து டிரா செய்தது. அதன்பிறகு நடைபெற்ற சூப்பர் ஓவரும் டிரா ஆனது. இதனால் பவுண்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது. இந்த முடிவு குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த முடிவு குறித்து இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : பரபரப்பான இறுதிப் போட்டியில் எடுக்கப்பட்ட முடிவு நியாயமானதல்ல. இந்த போட்டியில் ஒரு தருணம் கூட ஒரு அணிக்கு சாதகமாக இருக்கவில்லை. இரு அணிகளுமே வெற்றி பெறும் நிலையில் விளையாடின சமபலத்துடன் விளையாடிய இரு அணிகளும் வெற்றி தகுதியானவர்கள் என்று நான் நினைக்கிறேன்.

Eng-1

போட்டி முடிந்ததும் நான் வில்லியம்சனிடம் பேசினேன். அவரும் என்னைப் போலவே குழப்பத்தில் இருந்தார். கிரிக்கெட் வரலாற்றில் இதுபோன்ற இறுதிப்போட்டி நடக்கவே இல்லை மேலும் இது ஒரு சமமான போட்டி நடந்தது கிடையாது. எனினும் உலக கோப்பை நாங்கள் பெற்றதில் மகிழ்ச்சியுடன் உள்ளோம் என்றும் மோர்கன் கூறினார்.

Advertisement