ENG vs SL : சிறப்பாக பந்துவீசி இலங்கையை கட்டுப்படுத்தியும் நாங்கள் தோற்க இதுவே காரணம்- மோர்கன்

உலக கோப்பை தொடரின் 27 வது போட்டி நேற்று லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து

Morgan
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 27 வது போட்டி நேற்று லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.

eng-v-sl

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இலங்கை அணி. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 232 இரண்டு அடித்தது அதிகபட்சமாக மேத்யூஸ் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -

பிறகு 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 47 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டோக்ஸ் 82 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் மலிங்கா சிறப்பாக பந்துவீசி 10 ஓவர்களுக்கு 43 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

malinga

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் கூறியதாவது : நாங்கள் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறோம். இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்தி நிறுத்தினோம். இந்த இலக்கு என்பது எட்டக் கூடிய ஒன்றுதான் ஆனாலும் இலங்கை அணி இரண்டு நபர்களின் (மேத்யூஸ், மலிங்கா) ஆட்டம் எங்களிடமிருந்து ஆட்டத்தை அவர்கள் பக்கம் திருப்பியது. இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியும் மிகுந்த கடுமையான போட்டியாக உள்ளது.

stokes

இந்த போட்டி முழுவதும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவே அமைந்தது. ஏனெனில் இரு அணி வீரர்களும் சிறப்பாக பந்துவீசினார்கள். இந்த தொடர் ஒரு பெரிய தொடர் என்பதால் அனைத்து அணிகளுக்கும் புள்ளிபட்டியலில் முன்னேற வாய்ப்பு உள்ளது. அடுத்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் மோத உள்ளோம் .அவர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது எப்போது நங்கள் எதிர்பார்க்கும் ஒன்று அடுத்த போட்டியில் ராய் விளையாடுவாரா என்பதும் சந்தேகம் தான் என்று மோர்கன் கூறினார்.

Advertisement