இவர்கள் இருவரும் ஆடிய இந்த அசத்தலான ஆட்டமே எங்களது தோல்விக்கு காரணமாக அமைந்தது – மோர்கன் வருத்தம்

Morgan
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரரான ஜேசன் ராய் 46 ரன்களும், கேப்டன் மோர்கன் 28 ரன்கள் குவித்தனர். இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய வாஷிங்டன் சுந்தர் மற்றும் தாக்கூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

kohli 3

- Advertisement -

அதனைத் தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 18 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் துவக்க வீரராக அறிமுகமான இஷான் கிஷன் போட்டியிலேயே 32 பந்துகளில் 56 ரன்கள் குவித்து அசத்தினார். கேப்டன் விராட் கோலி 49 பந்துகளை சந்தித்து 73 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரில் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் கூறுகையில் : வெற்றிக்கு இந்த இலக்கு போதுமானதாகவே இருந்தது. ஆனாலும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் இன்று சிறப்பாக பந்துவீசி எங்களை பெரிய ரன் குவிப்பிற்க்கு செல்ல விடாமல் தடுத்துவிட்டனர்.

bhuvi

இந்த மைதானத்திற்கு ஏற்றபடி வேகத்தை குறைத்து அவர்கள் பந்து வீசினார்கள். வேகம் குறைந்த பந்துகளும், பின்னோக்கி கால்வைத்து வீசப்படும் பந்துகளும் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக அமைந்தன. இருப்பினும் எங்களுக்கு இந்தப்போட்டி சற்று வருத்தமான விடயத்தையே தந்தது. இந்திய அணி சேசிங்கின் புள்ளி விவரப்படி எப்போதும் சிறந்த அணியாக விளங்குகிறது மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

ishan 1

அவர்களுக்கு எதிராக முதல் 10 ஓவர்களில் நாங்கள் விக்கெட் வீழ்த்த தவறிவிட்டோம். கோலி மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர் என்று மோர்கன் தோல்வி குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement