கிட்டத்தட்ட வெற்றிக்கு அருகில் நாங்கள் சென்றுவிட்டோம். இந்த போட்டியின் தோல்விக்கு இதுவே காரணம் – மோர்கன் வருத்தம்

Morgan
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 15வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்ய முதலில் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் என்ற பெரிய ரன் குவிப்பை வழங்கியது. துவக்க வீரராக டூபிளெஸ்ஸிஸ் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ருதுராஜ் 64 ரன்கள் எடுத்து அசத்தினார். இவர்கள் இருவரின் அதிரடி காரணமாக சென்னை அணி 220 என்ற பிரமாண்ட ரன்குவிப்பை வழங்கியது.

cskvskkr

- Advertisement -

அதன்பின்னர் 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி பவர் பிளே 6 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து மோசமான துவக்கத்தை கண்டது. அதன் பின்னர் போட்டி முடிந்தது என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரசல் ஆகியோர் இணைந்து சென்னை அணிக்கு பயத்தை காட்டினர். இருவரும் சரமாரியாக சிஎஸ்கே அணியின் பந்து வீச்சாளர்களை அடித்து ரன்களை சேர்த்தனர். ஒருகட்டத்தில் 11 ஓவர்களில் 112 ரன்கள் வந்த நிலையில் ரசல் ஆட்டமிழந்தும் வெளியேறினார்.

அதன்பின்னர் சென்னை அணி எளிதாக வெற்றியை நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அந்த வேலையில் கம்மின்ஸ் 34 பந்துகளில் 66 ரன்கள் குவிக்க இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்றார். அவர் இருக்கும் வரை கொல்கத்தா அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி இரண்டு வீரர்கள் அவரால் ரன் அவுட் ஆகி வெளியேறியதால் கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்கள் அடித்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

russell

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேட்டியளித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் கூறுகையில் : இந்த போட்டியில் இந்த அளவு இறுதிவரை செல்லும் என்று நான் எதிர் பார்க்கவில்லை. ஆனால் ரசல் மற்றும் தினேஷ் கார்த்திக் சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து போட்டியை இறுதிவரை கொண்டு சென்றனர். இந்த மைதானத்தில் ஒரு முறை நாம் அட்வான்டேஜ் எடுத்து விளையாடினால் தடுத்து நிறுத்துவது மிக கடினம். அந்த வகையில் கம்மின்ஸ் சிறப்பாக விளையாடினார். இறுதிவரை அவர் ஒரு வெற்றிக்கான வாய்ப்பை எடுத்து கொண்டு சென்றார். இந்த போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது.

cummins

மிடில் ஆர்டர் மற்றும் லோயர் ஆர்டர் சிறப்பாக செயல்பட்டது. ஆரம்பத்தில் நாங்கள் விக்கெட்டை விட்டதும் அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர். முதல் ஐந்து ஓவர்கள் எங்கள் வழியில் இல்லை இருப்பினும் இறுதியில் எங்களது அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். புது மைதானத்தில் நாங்கள் விளையாடிய விதம் அருமையாக இருந்தது. 220 ரன்கள் என்பதை நாங்கள் கிட்டத்தட்ட நெருங்கினாலும் முதலில் 5 விக்கெட்டுகளை வெகுவிரைவாக இழந்தது தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று தோல்வி குறித்து மோர்கன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement