மென்மேலும் வலுப்படும் கொல்கத்தா அணி. அணியில் இணைந்த 2 நட்சத்திர வீரர்கள் – வேறலெவல் தான்

Kkr
- Advertisement -

பல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Kkr

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் கொல்கத்தா அணிக்கு வலு சேர்க்கும் விதமாக 2 நட்சத்திர வீரர்கள் அணியில் இணைய இருப்பதாக கொல்கத்தா அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் 23 ஆம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் கேகேஆர் அணியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் மற்றும் இந்த ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு ஏலம் போன ஆஸ்திரேலியாவை சேர்ந்த கம்மின்ஸ் ஆகிய இருவரும் முதல் போட்டியில் அணியுடன் இணைவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் நாட்கள் ஆறு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரின் வருகையும் அணிக்கு மிகப் பெரிய பலத்தை தரும் இதுகுறித்து கொல்கத்தா அணியின் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில் : இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன், டாம் பாண்டன், ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் ஆகிய மூவரும் தனி விமானத்தில் அபுதாபி வரவிருக்கின்றனர்.

பாதுகாக்கப்பட்ட பகுதியிலிருந்து இந்த தொடருக்கு வருவதால் அவர்களின் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய நாட்களின் எண்ணிக்கை 14 லிருந்து 6 நாட்களாக குறைத்துள்ளோம் மேலும் இதுகுறித்து பிசிசிஐ அமைப்புக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். இவர்கள் மூவரும் 17ம் தேதி அபுதாபிக்கு தனி விமானத்தில் வருகின்றனர்.

Cummins

அதனைத் தொடர்ந்து 23ஆம் தேதி நடைபெற இருக்கும் ஆட்டத்தில் 6 நாட்களுக்கு பிறகு அவர்கள் போட்டியில் பங்கேற்பார்கள் இருப்பினும் அவர்கள் பயிற்சியில் ஈடுபட முடியாது என்பதையும் நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் சி.பி.எல் இருந்து வரும் வீரர்களுக்கும் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தல் போதுமானதாக இருக்கும் என்பதே எங்களது கருத்து என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement