என்னோட சி.எஸ்.கே ஜெர்சில மட்டும் இதை நீக்கிடுங்க. மொயின் அலி வைத்த கோரிக்கை – ஏற்றுக்கொண்ட நிர்வாகம்

Moeen-Ali
- Advertisement -

இந்தாண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு சென்னை அணிக்காக முதல் முறையாக இங்கிலாந்து வீரர் மொயின் அலி விளையாட இருக்கிறார். அவரை இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் 7 கோடி ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியது. இந்நிலையில் சென்னை அணியின் ஒரு ஸ்பான்சராக இருக்கும் எஸ்என்ஜே 10000 மதுபான கம்பெனி அவர்களுடைய லோகோவை சென்னை அணியின் வீரர்கள் விளையாடக்கூடிய உடையில் இணைத்து இருந்தனர்.

moeen ali

இந்நிலையில் இங்கிலாந்து வீரர் மொயின் அலி அந்த சின்னத்தை தனது உடையில் இருந்து எடுக்குமாறு சென்னை அணி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக விளையாடி வரும் மொயின் அலி, பெரிதாக மதுபானங்களை விரும்பமாட்டார். அவரைப்போலவே சக இங்கிலாந்து வீரரான ஆடில் ரசீதும் மதுபானங்களை விரும்பமாட்டார். இந்நிலையில் சென்னை அணிக்காக ஆட உள்ள மொயின் அலி, தனது உடையில் மதுபானம் சின்னம் இருப்பது தனக்கு பிடிக்கவில்லை என்று சென்னை அணி நிர்வாகத்திடம் கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் அதை எடுத்து விடுமாறு தன்னுடைய விருப்பத்தை சென்னை அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். சென்னை அணியும் அவரது விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து அவரது உடையில் இருந்து மட்டும் அந்த சின்னத்தை நீக்கியுள்ளது. மொயின் அலியின் இத்தகைய செயல் பல்வேறு கிரிக்கெட் ரசிகர்களிடம் இருந்து ஆதரவை பெற்றுள்ளது. கடந்த ஆண்டுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடி உள்ள மொயின் அலி, 2018 ஆம் ஆண்டு முதல் இதுவரை மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார்.

Moeen ali 1

ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில், மொத்தமாக 17 போட்டிகளில் விளையாடி 309 ரன்களை அடித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 158.46 ஆகும். மேலும் பவுலிங்கில் 17 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவரது எகானமி 7.17 ஆகும். சென்னை அணிக்கு முதல் முதலாக ஆட உள்ள மொயின் அலி, மகேந்திர சிங் தோனி தலைமையின் கீழான உள்ளது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். மகேந்திர சிங் தோனியிடம் விளையாடிய வீரர்கள் அனைவரும் அவர் தங்களை சிறந்த வகையில் ஊக்குவிப்பார் என்று என்னிடம் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

மேலும் அவர்களது ஆட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்ததாகவும் கூறியுள்ளனர். ஒரு கேப்டன் இப்படித்தான் இருக்க வேண்டும், தன் தலைமையின் கீழ் விளையாடும் வீரர்களின் விளையாட்டை நன்கு மேம்படுத்த வேண்டும். அதை மகேந்திர சிங் தோனி மிக சிறப்பாக செய்து வருகிறார்.

Moeen

அவரின் தலைமையின் கீழ் சென்னை அணிக்காக நான் விளையாட உள்ளது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் என்று மொயின் அலி கூறியுள்ளார். மேலும் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி டெல்லி அணிக்கு எதிராக நடக்கவுள்ள சென்னை அணியின் முதல் போட்டியில்,மொயின் அலி நிச்சயம் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Advertisement