இனிமேல் கோலிக்கு அழுத்தம் வேணாம். உடனே புதிய கேப்டனாக இவரை மாத்துங்க – மான்டி பனேசர் கருத்து

Panesar
- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து விராட் கோஹ்லியின் கேப்டன்சியின் மீது பல்வேறு விமர்ச்சனங்கள் முன்வைக்கப்பட்டு வைக்கப்பட்டு வருகின்றன. அவரைப் பற்றி கருத்து கூறி வரும் முன்னாள் வீரர்களில் சிலர், அவருக்கு ஆதரவாகவும் மேலும் சிலர் அவருக்கு எதிராகவும் இருக்கின்றனர். இந்நிலையில் தனியார் விளையாட்டு இணையதளம் ஒன்றிர்க்கு பேட்டியளித்திருக்கும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மான்ட்டி பனேசர், இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் வெற்றி பெற வேண்டுமானால் இந்திய அணியானது, ஸ்பிலிட் கேப்டன்சி முறையை கையிலெடுக்க வேண்டும் என்று கருத்து கூறியுள்ளார்.

IND

- Advertisement -

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியானது, 2017 ஆம் நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் மற்றும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை தொடரில் தோல்வியைத் தழுவியிருக்கிறது. அதனையடுத்து ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவும், டெஸ்ட் போட்டிகளில் விராட் கோஹ்லியும் கேப்டனாக செயல்பட வேண்டும் என்ற கருத்தை நீண்ட காலமாகவே இந்திய ரசிகர்களும் சில முன்னாள் வீரர்களும் தெரிவித்து வந்தனர். தற்போது இந்த முறையைத்தான் இந்திய அணி பிப்பற்ற வேண்டும் என்று மான்ட்டி பனேசர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் கூறியதாவது;

விராட் கோஹ்லி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஏற்பட்ட தோல்வியின் அழுத்தத்தில் இருந்தே இன்னும் மீளவில்லை. இந்நிலையில் எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் தோல்வியடைந்தால் அவர்மீதான அழுத்தம் இன்னும் அதிகமாகும். இதன் காரணமாக எதிர்வரும் டி20 உலக கோப்பையிலும் இந்திய அணி தோல்வியைத்தான் சந்திக்கும். எனவே இந்திய அணியானது ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பை மற்றொரு வீரரான ரோஹித் சர்மாவிடம் ஒப்படைக்கும் முடிவை எடுப்பது தான் சிறந்ததாக இருக்கும்.

அவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை மிகச் சிறப்பாக வழி நடத்தி உள்ளார் என்பதால் இந்திய அணியையும் அவரால் சிறப்பாக வழிநடத்த முடியும் என்று அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

Rohith

2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித் சர்மா, இதுவரை ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி கொடுத்துள்ளார். மேலும் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடர் மற்றும் இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு தொடரான நிஹாதஸ் ட்ராபி ஆகிய இரு தொடர்களிலும் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு கோப்பையை கைப்பற்றி கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement