ஹார்டிக் பாண்டியா வேணாம். இவரை சேருங்க கண்டிப்பா ஜெயிக்கலாம் – மான்டி பனேசர் கருத்து

Panesar
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ஹர்டிக் பாண்டியா பேட்டிங்கில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மட்டுமின்றி பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்படக் கூடியவர். தனது கெரியரின் ஆரம்பத்தில் பவுலிங்கில் அசத்திய பாண்டியா 2018 ஆம் ஆண்டு முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக செய்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பந்துவீசாமல் முழுநேர பேட்ஸ்மேனாக அணியில் இருந்து வருகிறார்.

pandya 2

- Advertisement -

நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரிலும் அவர் பந்து வீசவில்லை. இந்நிலையில் உலக கோப்பை அணியில் பாண்டியா பந்துவீசாமல் இருந்தால் அணியில் தேர்வு செய்யப்பட மாட்டார் என்று கூறப்பட்ட நிலையில் உலகக்கோப்பையில் தான் பந்து வீசுவதாக உறுதியளித்து வாய்ப்பினையும் பெற்றார்.

இந்நிலையில் தற்போது உலக கோப்பை தொடருக்கு முன்பாக பயிற்சி ஆட்டங்கள் இரண்டிலும் பாண்டியா பந்து வீசவில்லை. இதன் காரணமாக அவர் மீது நாளுக்கு நாள் விவாதம் எழுந்து வருகிறது. இந்நிலையில் பாண்டியாவின் இடம் குறித்த பல்வேறு கருத்துக்களை முன்னாள் வீரர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் பாண்டியா குறித்து பேசுகையில் :

thakur 1

இந்திய அணியில் ஹார்டிக் பாண்டியா பந்து வீசாமல் நீடிப்பது கடினம் எனவே அவருக்கு பதிலாக உலகக்கோப்பை போட்டிகளில் ஷர்துல் தாகூர் விளையாட வைப்பது சிறப்பான ஒரு முடிவாக அமையும். ஏனெனில் பந்துவீச்சில் தரமாக செயல்படும் ஷர்துல் தாகூர் பேட்டிங்கிலும் நிச்சயம் கை கொடுக்கக் கூடியவர்.

- Advertisement -

இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியா எப்போது பந்துவீசுவார் ? ரோஹித் சர்மா பகிர்ந்த முக்கிய தகவல் – விவரம் இதோ

எனவே பாண்டியாவுக்கு பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் இணைக்கப்பட்டால் அது நல்ல முடிவாகவே இருக்கும். உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் கோலி ஷர்துல் தாகூர் மீது நம்பிக்கை வைத்தே ஆக வேண்டும். அவர் பென் ஸ்டோக்ஸ் போன்று ஒரு மேட்ச் வின்னர் என பனேசர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement