இந்த ஒரு விஷயம் மட்டும் இந்திய அணிக்கு கைகொடுத்தா 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தலாம் – மான்டி பனேசர்

Panesar
- Advertisement -

இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஜூன் மாதம் முதல் தேதி மோத உள்ளது. அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளதால் கிட்டத்தட்ட நான்கு மாதம் கொண்ட பெரிய தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி இம்மாத ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

அப்படி இந்திய அணி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இந்த தொடரை இந்திய அணி எவ்வாறு எதிர் கொள்ளும் என்றும் இந்த தொடரில் வெற்றி வாய்ப்பு யாருக்கு ? என்றும் பல விவாதங்கள் சமூக வலைதளத்தில் இருந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் எந்த அணி வெற்றி பெறும் என்பது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மான்டி பனேசர் தனது கருத்தினை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்தால் நிச்சயம் இந்திய அணியால் 5 – 0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்த முடியும். இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ளது.

INDvsNZ

அப்போது மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். அந்த வேளையில் நியூசிலாந்து அணி அதனை பயன்படுத்தி இந்திய அணிக்கு கடுமையான போட்டியை அளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில் : ஆகஸ்ட் மாதம் வெயிலின் தாக்கம் இங்கிலாந்தில் அதிகம் இருக்கும் என்பதால் ஆடுகளங்கள் நிச்சயம் காய்ந்து போக வாய்ப்பிருக்கிறது.

Ashwin

அவ்வாறு ஆடுகளங்கள் நன்றாக காய்ந்து சுழற்பந்து வீச்சுக்கு மைதானம் ஒத்துழைக்கும் பட்சத்தில் இந்திய அணியால் நிச்சயம் இங்கிலாந்து அணியை வீழ்த்த ஒரு அற்புதமான வாய்ப்பு உள்ளது என பனேசர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement