தற்போதைய கிரிக்கெட் உலகின் உண்மையான சூப்பர் ஸ்டார் இவர்தான் – மான்டி பனேசர் புகழாரம்

Panesar
- Advertisement -

கொரோனா ஏற்படுத்திய அச்சுறுத்தலுக்கு பிறகு நான்கு மாத இடைவெளி கழித்து, 117 நாட்கள் கடந்து தற்போது இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

wi 1

- Advertisement -

இந்த தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற அடுத்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற நிலையில் சமநிலைப்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த தொடர் குறித்தும், இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் குறித்தும் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான மான்டி பனேசர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். சமீப காலமாகவே உலகின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக பார்க்கப்படுபவர் தனது சிறப்பான பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அசத்தி வரும் இவர் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறார்.

Stokes

உலக கோப்பை தொடரில் இறுதிப் போட்டியின்போது ஒரே ஆளாக நின்று அந்த அணி கோப்பையை பெற்று தந்தவர் ஸ்டோக்ஸ் தற்போது நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் தொடரிலும் இரண்டு போட்டியில் சேர்த்து 360 ரன்கள் மற்றும் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஸ்டோக்ஸ் குறித்து பேசிய பனேசர் கூறுகையில் :

- Advertisement -

இவ்வாறு அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவது அசாத்தியமானது. அவர் தொடர்ந்து இங்கிலாந்து அணியை தனது திறமையின் மூலம் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்கிறார். தற்போதைய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் யார் என்று என்னைக் கேட்டால் நிச்சயம் ஸ்டோக்ஸ் தான் என்று அவர் கூறியுள்ளார். மேலும் ஆம் அவர்தான் கிரிக்கெட்டில் சூப்பர் மேன் தற்போது பல மந்திரங்களை போட்டு அவர் வெற்றிகளை தேடித் தந்து கொண்டிருக்கிறார்.

Stokes

கடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியிலும், ஆஷஸ் தொடரிலும் இவரது ஆட்டம் அசாத்தியமானது .கடந்த இரண்டு வருடமாக ஒற்றை ஆளாக நின்று இங்கிலாந்து அணிக்கு பல்வேறு வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார். வேறு எந்த கிரிக்கெட் வீரரும் தற்போதைய நிலையில் இவரைப்போல் ஆடுவதில்லை. அந்த அளவிற்கு அவர் சிறப்பாக விளையாடி வருகிறார் என்று பனேசர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement