பயமில்லாத சுதர்சன் இந்தியாவின் அடுத்த சூப்பர்ஸ்டாரா..அவரோட இடத்தை நிரப்புவார்.. பனேசர் நம்பிக்கை

Monty panesar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்குகிறது. சமீபத்தில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய அடுத்தடுத்து ஓய்வு பெற்றார்கள். எனவே இம்முறை அவர்களுடைய இடத்தில் களமிறங்கப் போவது யார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

அது போன்ற சூழ்நிலையில் தமிழக வீரர் சாய் சுதர்சன் முதல் முறையாக தொடரில் விளையாட இந்தியாவுக்கு தேர்வாகியுள்ளார். ஐபிஎல் 2025 தொடரில் அபாரமாக விளையாடிய அவர் 759 ரன்களை அடித்து ஆரஞ்சு தொப்பியை வென்று சாதனை படைத்தார். மேலும் இங்கிலாந்தில் கவுன்டி தொடரில் விளையாடிய அவர் ஒரு சதத்தை அடித்து அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

- Advertisement -

அடுத்த சூப்பர்ஸ்டார்:

அதன் காரணமாக தற்போது இங்கிலாந்தில் விளையாட தேர்வாகியுள்ள அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சாய் சுதர்சன் வருங்காலங்களில் சிறப்பாக விளையாடி இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாராகும் முன்னேறி விராட் கோலி இடத்தை நிரப்புவார் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“இந்திய அணியில் தற்சமயத்தில் நல்ல இளம் வீரர்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு குறிப்பிடத்தக்க பேட்ஸ்மேன் சர்ரே கவுன்டி அணிக்காக விளையாடும் சாய் சுதர்சன். மிகவும் ஆக்ரோஷமாக விளையாடும் அவர் பயமற்றவராக தெரிகிறார். இங்கிலாந்து சூழ்நிலைகளில் சர்ரே அணிக்காக அவர் சிறப்பாக விளையாடியுள்ளார்”

- Advertisement -

பனேசர் நம்பிக்கை:

“அவர் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர்ஸ்டாராக இருப்பார் என்று நினைக்கிறேன். குறிப்பாக விராட் கோலி விளையாடிய நம்பர் 4வது இடத்தை அவர் எடுத்துக் கொள்வார் என்று நினைக்கிறேன். விராட் கோலி மரபு நான் முன்னோக்கி எடுத்துச் செல்ல விரும்பும் விஷயங்களில் ஒன்றாக இருக்கும். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடிய விதம் அபாரமாக இருந்தது”

இதையும் படிங்க: பும்ரா கிடையாது.. இங்கிலாந்து தொடரில் அசத்தப்போகும் இந்திய பவுலர் இவர்தான் – மேத்யூ ஹைடன் கணிப்பு

“அவரைப் போலவே தற்போதைய இளம் இந்திய அணியும் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜூன் 20ஆம் தேதி துவங்குகிறது. அந்தப் போட்டியிலேயே சாய் சுதர்சனுக்கு இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே தமிழக ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

Advertisement