
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரராக இயன்றளவும் சச்சின் டெண்டுல்கர் முன்னிலையில் இருந்து வருகிறார். அவரது ரன் எண்ணிக்கையை இனிவரும் பேட்ஸ்மேன்கள் முறியடிப்பது கடினம். இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் முதலிடத்தில் இருக்கும் சச்சினின் சாதனையை முறியடிக்க ஜோ ரூட்டிற்கு வாய்ப்பு இருக்கிறது.
ஏனெனில் தற்போது 34 வயதான ஜோ ரூட் இதுவரை அந்த அணிக்காக 153 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 36 சதம் மற்றும் 65 அரைசதம் என 13006 ரன்களை குவித்துள்ளார். இன்னும் கிட்டத்தட்ட நான்கு முதல் ஆறு ஆண்டுகள் அவரால் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாட முடியும் என்பதனால் சச்சினின் சாதனை அவரால் எளிதில் முறியடிக்க முடியும்.
அதே வேளையில் தற்போது 36 வயதான விராட் கோலி 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9230 ரன்கள் குவித்துள்ள வேளையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டார். இதன் காரணமாக அவரால் 10000 ரன்களை கூட எட்ட முடியாமல் போயுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மான்டி பனேசர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஜோ ரூட்டை விட விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஜோ ரூட் விராட் கோலி ஆகிய இருவரில் ஒருவரை சிறந்த பேட்ஸ்மேன் என்று சொல்ல வேண்டுமென்றால் நான் விராட் கோலியை தான் சொல்லுவேன்.
ஏனெனில் விராட் கோலி அனைத்து வகையான ஃபார்மெட்டிலும் மிகச் சிறப்பான ஒரு பேட்ஸ்மேன். அவருடைய குணாதிசயம் மற்றும் ஆரா என்பது அவரை உச்சத்தில் வைத்துள்ளது. எனவே அவரே சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறுவேன். அதேபோன்று ஜேம்ஸ் ஆண்டர்சன் பும்ரா ஆகிய இருவரில் யார் பெஸ்ட் பௌலர்? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் கூறுகையில் :
இதையும் படிங்க : விராட் கோலியின் மீதுள்ள அன்பினால் 18 வருட பாரம்பரியத்தை உடைத்த ரஜத் பட்டிதார் – இந்த மனசு யாருக்கு வரும்?
இதற்கு என்னுடைய பதில் ஆன்டர்சன் தான். ஏனெனில் எல்லா சூழ்நிலையிலும், பல்வேறு காலகட்டங்களில் ஆண்டர்சன் செயல்பட்ட விதத்தை பார்க்கையில் அவரே மிகச்சிறந்த பந்துவீச்சாளர் என்று தான் நினைப்பதாகவும் மான்டி பனேசர் கூறியது குறிப்பிடத்தக்கது.