அந்த சவாலை சமாளிக்கலன்னா விராட் மாதிரி.. ஜோ ரூட் ரிட்டையராகும் அளவுக்கு வீழ்ச்சியை சந்திப்பாரு.. மான்டி பனேசர்

Monty Panesar 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 2 (5) என்ற கணக்கில் இங்கிலாந்து சமன் செய்தது. அந்தத் தொடரில் இங்கிலாந்துக்காக நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் அதிக ரன்கள் அடித்து அசத்தினார். அத்துடன் டிராவிட், சங்கக்காரா, காலிஸ், பாண்டிங் ஆகியோரை முந்திய அவர் சச்சினுக்கு பின் 2வது ரன்கள் (13543) அடித்த வீரராக சாதனை படைத்தார்.

தற்போது 35 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் இன்னும் 3 – 4 வருடங்கள் விளையாடி 3000 ரன்கள் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் சச்சினை (15921) முந்தி அதிக ரன்கள் அடித்த வீரராக ரூட் உலக சாதனைப் படைப்பார் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இங்கிலாந்து அங்கு ஆஷஸ் தொடரில் விளையாட உள்ளது.

- Advertisement -

விராட் கோலி மாதிரி:

இங்கிலாந்தின் ஜாம்பவானாக போற்றப்படும் ஜோ ரூட் இதுவரை ஆஸ்திரேலியாவில் ஒருமுறை கூட சதத்தை அடித்ததில்லை. எனவே இம்முறை ஆஸ்திரேலியாவில் ரூட் சதத்தை அடித்து ஆஷஸ் கோப்பையை வெல்ல உதவுவார் என்று இங்கிலாந்து ரசிகர்கள் நம்புகின்றனர். இந்நிலையில் 2025 ஆஷஸ் ஆஸ்திரேலிய சவாலை சமாளிக்காவிட்டால் விராட் கோலி போல ஓய்வு பற்றி சிந்திக்கும் அளவுக்கு ஜோ ரூட் வீழ்ச்சியை சந்திப்பார் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் மான்டி பனேசர் கணித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஜோ ரூட் சாதனைப் பயணம் அடுத்த சில வருடங்கள் மற்றும் ஆஷஸ் எப்படி செல்கிறது என்பதைப் பொறுத்து அமையும். நாம் விராட் கோலியை பார்த்தோம் அல்லவா? ஆஸ்திரேலியாவுக்கு சென்ற அவர் 4, 5வது ஸ்டம்ப் லைனில் போடப்பட்ட பந்துகளை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தடுமாறினார்”

- Advertisement -

ஆஸ்திரேலிய சவால்:

“அதுவே அவருடைய ஓய்வுக்கும் முக்கிய காரணமாக அமைந்தது. அதே போல ரூட்டுக்கு ஆஷஸ் நன்றாக அமையாமல் போனால் அனைத்தும் மோசமாக அமையும். அத்தொடர் மோசமாக அமைந்தால் இங்கிலாந்து தங்களுடைய கேப்டன், பயிற்சியாளரை இழப்பார்கள். ரூட் தன்னுடைய உச்சத்தை தாண்டி விட்டாரா? என்று மக்கள் கேள்வி எழுப்புவார்கள். எனவே நீங்கள் எப்படிப்பட்ட நல்ல வீரராக இருந்தாலும் ஆஸ்திரேலியாவில் அசத்துவது முக்கியம்”

இதையும் படிங்க: தோனியின் சிக்ஸருக்கு அப்றம் தான்.. அவருக்காக இந்தியா 2011 உ.கோ ஜெய்ச்சுது.. கம்பீரு கருத்துக்கு ரெய்னா பதிலடி

“ஆஸ்திரேலிய பவுலிங் அட்டாக் வலுவாக இருப்பதால் அவருக்கு ஆஷஸ் கடினமாக இருக்கும். அங்கே அவர் சதத்தை அடிக்க விரும்புவார். பவுன்ஸ் இல்லாத ஏதோ ஒரு மைதானத்தில் அவர் சதமடிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் அது கடினமாக இருக்கும். ரூட் 18000 ரன்கள் அடிப்பார் என்று நான் ஏற்கனவே தெரிவித்தது இந்திய ரசிகர்களுக்கு பிடிக்காது என்று எனக்குத் தெரியும். இப்போது போலவே அல்லது சச்சின் போல விளையாட முடிந்தால் அவரால் அந்த சாதனையை (18000) படைக்க முடியும்” என்று கூறினார்.

Advertisement