ஜோ ரூட்டை இந்திய அணி சீக்கிரம் அவுட் ஆக்கணுனா இதை செய்தால் போதும் – மான்டி பனேசர் யோசனை

Panesar
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற 25-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்க உள்ளது.

siraj 1

- Advertisement -

இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இங்கிலாந்து அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்சில் 180 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நடைபெற்று முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் சேர்த்து 300 ரன்களுக்கு அடித்துள்ளார்.

அவரை விழ்த்த இந்திய அணி சற்று சிரமப்பட்டே வருகிறது. இந்நிலையில் இனிவரும் போட்டிகளில் ஜோ ரூட்டை எதிராக வீழ்த்த இந்திய அணிக்கு யோசனை ஒன்றை அந்த அணியின் முன்னாள் வீரரான மான்டி பனேசர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஜோ ரூட் எப்பொழுதுமே பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தக்கூடியவர்கள்.

root 2

அவருக்கு எதிராக ஷார்ட் பிட்ச் பந்தை வீசக்கூடாது. ஏனெனில் அவர் புல்ஷாட் அடிப்பதில் வல்லவர். இதன் காரணமாக அவருக்கு அவுட் சைடு ஆஃப் ஸ்டம்பில் பந்து வீச வேண்டும். அப்படி தொடர்ந்து 5 ஆவது ஸ்டம்பில் பந்துவீசும் போது அவருக்கு நெருக்கடி ஏற்பட்டு கவனம் சிதற வாய்ப்பு உள்ளது. அப்படி பந்துவீசும் பட்சத்தில் அவரது விக்கெட்டை எளிதாக வீழ்த்த முடியும் என்று மான்டி பனேசர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

bumrah 1

எப்போது ரூட் பேட்டிங்கிற்கு வந்தாலும் உடனடியாக விராட் கோலி பும்ராவை கொண்டு வர வேண்டும். ரூட்டுக்கு எதிராக சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் தொடர்ந்து பந்துவீசும் பட்சத்தில் அவரது இயல்பான ஆட்டம் திசைதிரும்ப வாய்ப்புள்ளது. அவ்வாறு திசை திரும்பும் போது நிச்சயம் அவரது விக்கெட்டை எளிதில் வீழ்த்தி விடலாம் என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement