வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடரின் 2025/26 சீசன் நவம்பர் 23ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் துவங்கியது. இம்முறை பட் கமின்ஸ் காயத்தால் விலகியுள்ளதால் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக தலைமைத் தாங்குகிறார். ஆனால் 2018ஆம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடைப் பெற்ற அவரிடம் மீண்டும் கேப்டன்ஷிப் பதவியை கொடுக்கலாமா? என்று சமீபத்தில் முன்னாள் இங்கிலாந்து வீரர் மான்டி பனேசர் விமர்சித்திருந்தார்.
அதற்கு சில வருடங்களுக்கு முன் பிபிசி தொலைக்காட்சியில் பங்கேற்ற பனேசர் வினாடி வினா நிகழ்ச்சியில் தவறான பதில்களைச் சொன்னதைப் போல தாமும் அறியாமல் தவறு செய்து விட்டதாக ஸ்மித் பதிலளித்திருந்தார். குறிப்பாக அமெரிக்கா ஒரு நாடு அல்ல நகரம், ஜெர்மனியின் தலைநகரம் அதன்ஸ் என்று பனேசர் தெரிவித்திருந்தார். அதை சுட்டிக்காட்டி ஸ்மித் கலகலப்பான பதிலடி கொடுத்திருந்தார்.
சீட்டிங் சாம்பியன் ஸ்மித்:
இந்நிலையில் ஆஸ்திரேலிய வரலாற்றின் சீட்டிங் சாம்பியன் ஸ்மித் என்னைப் பற்றி பேசலாமா? என்று பனேசர் மீண்டும் மோசமாக வம்பிழுத்துள்ளார். இது பற்றி டெலிகிராப் பத்திரிக்கையில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “பட் கமின்ஸ்க்கு பதிலாக இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியை அவர் தலைமைத் தாங்கப்போவது சிரிப்பை ஏற்படுத்துவதற்கு கொஞ்சமும் குறையற்றது”
“அந்த மிகப்பெரிய நாளுக்கு முந்தைய நாளில் அவர் என்னைப் பற்றி பேச விரும்பியுள்ளார். அதற்காக அவர் என்னுடைய பழைய யூடியுப் வீடியோவைப் பார்த்து ஒவ்வொரு வார்த்தையாக மனப்பாடம் செய்ததை என்னால் நம்ப முடியவில்லை. அவரது தலைக்குள் நான் இந்தளவுக்கு சென்றதற்கு மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் இருவருமே தவறு செய்துள்ளோம். நான் வினாடிவினா நிகழ்ச்சியில் மட்டுமே நான் தவறு செய்தேன்”
பனேசர் வம்பிழுக்கும் வகையில் பதிலடி:
“ஆனால் அவர் கிரிக்கெட் களத்தில் தவறு செய்தார். அதனால் கண்ணாடியில் பார்த்துக்கொண்டு ஆஸ்திரேலிய வரலாற்றில் மோசமான சீட்டிங்கிற்கு உதாரணமாக இருக்கும் “சேண்ட்பேப்பர் கேட்டின்” ஒரு பகுதியாக இருந்ததை ஒப்புக்கொள்ள முடியுமா? என்று ஸ்மித்திடம் நான் கேட்பேன். ஸ்மித் ஒரு பெரிய பலவீனத்தையும் மன பாதிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். நாங்கள் கிரிக்கெட்டில் நாட்டுக்காக விளையாடினோம்”
இதையும் படிங்க: சுந்தர், சுதர்சன் உட்பட யாராக இருந்தாலும்.. கம்பீர் இதை செய்யலன்னா இந்தியா ஜெய்க்காது.. ரஹானே அட்வைஸ்
“அதில் எனக்கு சில நல்ல நாட்களும் மோசமான நாட்களும் அமைந்தன. தனது நாட்டுக்காக விளையாடும் போது ஸ்மித்துக்கும் சில நல்ல நாட்கள் அமைந்தன. ஆனால் அவருக்கு 2018இல் தென்னாப்பிரிக்காவில் மிகவும் அதிர்ச்சிகரமான நாள் அமைந்தது. ஒருவேளை நான் ஜோப்ரா ஆர்ச்சராக இருந்தால் உப்பு காகிதத்தை பயன்படுத்தாமலேயே என்னால் பந்தை ஸ்விங் செய்ய முடியும் என்று ஸ்மித்திடம் சொல்வேன். அல்லது ஜோ ரூட்டாக இருந்தால் உப்பு காகிதத்தை வைத்து பந்தை தேய்க்கும் ரகசியம் என்ன நண்பா? என்று ஸ்மித்தின் காதில் விழுமாறு சொல்வேன்” என்று கூறினார்.



