விராட் கோலி நீங்க இந்த ஒரு விஷயத்துல கொஞ்சம் ஜாக்கரதையா இருங்க – அட்வைஸ் கொடுத்த மான்டி பனேசர்

Panesar
Advertisement

விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட தயாராக இருக்கிறது. அதன்படி இன்று துவங்க இருக்கும் முதல் போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. அதை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் அங்கு நடைபெற இருக்கிறது. ஏற்கனவே இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இல்லை என்கிற காரணத்தினால் இம்முறை கோப்பையை கைப்பற்றி வரலாறு படைக்க இந்திய அணி காத்திருக்கிறது.

IND

மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளதால் இம்முறை தென் ஆப்பிரிக்கா நாட்டிலும் இந்திய அணி தொடரை கைப்பற்றும் என்றே அனைவரும் கருதுகின்றனர். ஆனால் விராத் கோலிக்கு இந்த தென்னாப்பிரிக்க தொடர் அவ்வளவு எளிதாக அமையப்போவதில்லை. ஏனெனில் அண்மையில் அவரது ஒருநாள் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவர் சதம் அடிக்காமல் விளையாடி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் விராட் கோலி கடும் அழுத்தத்தில் இருப்பதாகவும், அவர் இந்த டெஸ்ட் தொடரில் ஜாக்கிரதையாக விளையாட வேண்டியது அவசியம் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீபகாலமாக அதிக ரன்களை அடிக்கவில்லை இதன் காரணமாக அவரது இடம் பறிபோக வாய்ப்பு இருக்கிறது என்பது அவருக்கே தெரியும்.

kohli 1

எனவே தற்போது அவர் சற்று அழுத்தத்தில் இருக்கிறார். இந்த தொடரில் அவர் நிச்சயம் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்திய அணி வெற்றி பெற்றாலும் தனிப்பட்ட முறையில் அவர் ரன் குவிக்காததால் பெரிய சிக்கலில் இருக்கிறார். இருப்பினும் தான் இழந்த பார்மை எப்படி மீட்டெடுக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும்.

இதையும் படிங்க : முதல் டெஸ்ட் : போட்டியே துவங்கல. அதுக்குள்ள இப்படி ஒரு பிரச்சனையா? – முதல்நாள் போட்டி ரத்தாக வாய்ப்பு

தென்னாப்பிரிக்க மண்ணில் அவர் ஏற்கனவே சிறப்பாக விளையாடி உள்ளதால் இம்முறை இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன். இருப்பினும் இம்முறை கோலி கொஞ்சம் ஜாக்கிரதையாக இத்தொடரை கையாள வேண்டியது அவசியம் என மான்டி பனேசர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement