முதல் டெஸ்ட் : போட்டியே துவங்கல. அதுக்குள்ள இப்படி ஒரு பிரச்சனையா? – முதல்நாள் போட்டி ரத்தாக வாய்ப்பு

indvsrsa
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று செஞ்சூரியன் மைதானத்தில் மதியம் துவங்க உள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் அறிவிக்கப்பட்டதில் இருந்து இத்தொடர் நடைபெறுவதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வந்தன. ஆரம்பத்தில் இந்த தொடருக்கான அறிவிப்பு வெளியாகும் போது தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு வான்வழி போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக ஒரு தடை வந்தது.

INDvsRSA

பின்னர் அதனை தொடர்ந்து அங்கு பரவிவரும் ஓமைக்கிரான் தீவிரம் காரணமாக இந்திய அணி அங்கு தங்குவதும் சிரமமானது. ஆனால் அந்தப் பிரச்சனையும் ஓய்ந்து தற்போது சரியான பயோ பபுள் வளையத்தில் இந்திய அணி வீரர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து நாளொன்றுக்கு 15000 பேருக்கு மேலும் வைரஸால் பாதிக்கப்படுவதால் போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனால் ரசிகர்கள் இன்றி போட்டி நடைபெறும் என்று அந்த ஒரு குறையையும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் போக்கியது. இப்படி அடுத்தடுத்த தடைகளைச் சந்தித்து இன்று ஒரு வழியாக போட்டி திட்டமிட்டபடி துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இன்றைய முதல் நாள் போட்டி ரத்தாக வாய்ப்பு உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

weather

அதற்கு காரணம் யாதனில் போட்டி நடைபெறும் நகரில் உள்ள மோசமான வானிலை தான். தற்போது வெளியான வானிலை அறிக்கை படி முதல் நாள் போட்டி முழுவதும் மழையால் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது நாளும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இந்தப் போட்டியானது ஐந்து நாட்கள் நடைபெறுவதில் சந்தேகம் எழுந்துள்ளது. முதல் நாள் ஆட்டம் முழுவதும் நிச்சயமாக மழையால் பாதிக்கப்படும் என்பதால் முதல் நாள் போட்டி ரத்தாக வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : அவங்கள பத்தி பேசுற சரியான இடமும், நேரமும் இதுகிடையாது – ராகுல் டிராவிட் பிரஸ்மீட் டாக்

அதே வேளையில் கடைசி இரண்டு நாட்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் இந்த போட்டி டிராவில் முடிவடையவே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement