பும்ரா நோ பால் போடாம இருக்கணுனா இதை செய்ஞ்சே ஆகனும் – தெ.ஆ முன்னாள் வீரர் கொடுத்த அட்வைஸ்

Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி மழை காரணமாக டிராவில் முடிவடைந்த நிலையில் அடுத்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது.

Bumrah

- Advertisement -

இந்த இரண்டாவது போட்டியின் போது இந்திய அணி நிர்ணயித்த 271 ரன்களை நோக்கி ஐந்தாவது நாளில் இங்கிலாந்து அணி விளையாட தொடங்கியது. போட்டி முடிவடைய 60 ஓவர்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இந்த போட்டியும் நிச்சயம் டிராவில் தான் முடிவடையும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக 120 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது. கடைசி நாளில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக வேகப்பந்து வீச்சாளர்கள் ஷமி, பும்ரா, சிராஜ், இஷாந்த் ஆகியோர் இருந்தனர். இந்திய அணியின் இந்த வேகப்பந்து வீச்சு கூட்டணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதே வேளையில் இந்திய அணியின் முன்னணி வீரரான பும்ராவிற்கு அட்வைஸ் குவிந்து வருகிறது.

Bumrah 1

அதற்கு காரணம் யாதெனில் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் அவர் 15 நோ பால்களை வீசினர். குறிப்பாக ஒரே ஓவரில் நான்கு நோ பால்களையும் வீசியிருந்தார். இதனால் அவருக்கு பல்வேறு வீரர்கள் அட்வைஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான மாண்டி ஜான்டகி பும்ராவிற்கு தனது அறிவுரையை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

bumrah 1

நான் நீண்ட தூரம் ஓடி வந்து பந்து வீசுபவன். ஆனால் நான் இதே போன்று நோபால் வீசியது கிடையாது. என்னுடைய ரன் அப்பில் கடுமையான பயிற்சிகளை செய்து வந்தேன். அந்த வகையில் பும்ரா தற்போது ரன் அப்பில் கூடுதல் பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். அப்படி அவர் ரன் அப்பில் பயிற்சி செய்தால் நிச்சயம் அவரால் நோபால் வீசாமல் பந்து வீச முடியும் என அவர் அறிவுரை கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement