இந்த ரெண்டு பேரை தவிர வேறு யாரும் பிரயோஜனம் இல்லை – பங்களாதேஷ் கேப்டன் பேட்டி

Mominul
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் கடந்த 14ம் தேதி துவங்கியது. மூன்றாம் நாளான இன்று இந்திய அணி போட்டியை வெற்றிகரமாக முடித்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷில் 150 ரன்களை குவிக்க இந்திய அணி 493 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதனால் 343 ரன்கள் முன்னிலையில் இருந்த இந்திய அணி பங்களாதேஷ் அணியை இரண்டாவது இன்னிங்சில் 213 ரன்களுக்கு ஆட்டம் இழக்கச் செய்தது. இதன் மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய அகர்வால் (243 ரன்கள்) ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.இந்திய அணி சார்பாக ஷமி இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய பங்களாதேஷ் அணியின் கேப்டன் மொமினுல் ஹக் கூறியதாவது : டாஸ் வென்ற போது இது ஒரு சவாலான முடிவாக கருதி நாங்கள் பேட்டிங்கை தேர்வு செய்தோம். ஆனால் இந்த போட்டியில் எங்களால் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக விளையாட முடியவில்லை. இந்த போட்டியில் எங்களது அணி வீரர்கள் இரண்டு பேரைத்தவிர யாரும் சிறப்பாக விளையாடவில்லை.

shami

அபு ஜயாத் மற்றும் முஷ்பிகுர் ரகுமான் ஆகிய இருவர் மட்டுமே நன்றாக விளையாடினார்கள். லிட்டன் தாஸும் சிறப்பாக பேட்டிங் செய்தார். இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சுக்கு எதிராக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் திணறினர். இந்திய அணி சிறப்பான பந்துவீச்சு அட்டாக்கை கொண்டுள்ளது. இந்த போட்டியின் தோல்வியை மறந்து அடுத்த பிங்க் டெஸ்ட் போட்டியை எதிர்நோக்கி உள்ளோம் என்று அவர் கூறினார்.

Advertisement