வெயிட்டை குறைக்க சொன்ன தேர்வுக்குழு. அதன்படி 30 கிலோ வெயிட் குறைச்சி அணியில் இடம்பிடித்த – முன்னாள் பாக் வீரரின் மகன்

azam
- Advertisement -

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 22 வயது இளம் வீரரான அசாம் கான் பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக் போட்டியான பாகிஸ்தான் சூப்பர் லீக் மற்றும் இலங்கையில் நடக்கும் இலங்கை பிரீமியர் லீக் ஆகிய போட்டிகளில் பங்கேற்று தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் சிறப்பான வீரர் என்று அறியப்பட்டார். இவரது பேட்டிங் மிகுந்த அதிரடியாக இருந்தாலும் அவருக்கு பாகிஸ்தான் தேசிய அணியில் இடம் பெற ஒரேயொரு முட்டுக்கட்டையாக இருந்தது அவரது உடல் எடைதான்.

azam 1

ஏனெனில் தற்போது வளர்ந்து வரும் நவீன கிரிக்கெட்டில் வீரர்களின் பிட்னஸ்ஸிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 130 கிலோ வரை அவரது உடல் எடை இருந்தது அப்படி உடல் எடை இருந்தும் அவர் சிறப்பாகவே விளையாடி வந்தார். ஆனாலும் பாகிஸ்தான் தேசிய அணியில் இடம்பிடிக்க வேண்டும் எனில் நிச்சயம் நீங்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என தேர்வுக் குழுவினர் அவருக்கு அறிவுறுத்தி இருந்தனர்.

- Advertisement -

அதன்படி கடந்த 12 மாதங்களாக தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்ட அசாம் கான் தற்போது 30 கிலோ எடையை குறைத்து சற்று ஃபிட்டான தோற்றத்திற்கு மாறியுள்ளார். அதன்படி தற்போது தனது உடல் தகுதியை மாற்றியுள்ள அசாம் கான் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கான டி20 தொடரில் விளையாட முதல் முறையாக பாகிஸ்தான் அணிக்கு தேர்வாகி உள்ளார் என்ற நற்செய்தியும் வெளியாகியுள்ளது.

azam khan 1

22 வயதான இந்த விக்கெட் கீப்பிங் அதிரடி பேட்ஸ்மேன் அசாம் கான் யாரென்றால் பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய முன்னாள் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான மொயின் கானின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணிக்காக 1990 ஆம் ஆண்டு அறிமுகமான மொயின் கான் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார்.

Azam khan

பாகிஸ்தான் அணிக்காக 69 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 219 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விக்கெட் கீப்பிங் மொயின் கான் தற்போது தனது மகனை ஒரு அதிரடியான விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக மாற்றியுள்ளது பலரது வரவேற்பையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பாகிஸ்தான் தேசிய அணிக்காக விளையாடா தேர்வாகியுள்ள அசாம் கானுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement