நட்பே வீக்னெஸ்.. இந்தியாவுடன் இதை செய்யாம இருந்தாவே ஜெயிக்கலாம்.. பாகிஸ்தானுக்கு மொய்ன் கான் அறிவுரை

Moin Khan
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் அடுத்ததாக ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பைகளில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெற்றி பெற்றது. அத்துடன் 2024 டி20 உலகக் கோப்பையிலும் வீழ்த்திய இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக பெரும்பாலும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

மறுபுறம் கடைசியாக 2017 சாம்பியன்ஸ் டிராபியை ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து பாகிஸ்தான் கோப்பையை வென்றது. மேலும் 2021 டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக இந்திய அணியை தோற்கடித்து பாகிஸ்தான் வரலாறு படைத்தது. அந்த 2 வெற்றிகளை தவிர்த்து ஐசிசி தொடர்களில் மற்ற பெரும்பாலான போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் கை ஓங்கி இருக்கிறது என்றே சொல்லலாம்.

- Advertisement -

நட்பு எதற்கு:

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிராக சமீப காலங்கள் தோல்விகளுக்கு அவர்களுடன் பாகிஸ்தான் வீரர்கள் ஆற்றும் நட்பே காரணம் என்று முன்னாள் வீரர் மொய்ன் கான் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதுவே கடைசியில் பாகிஸ்தான் அணிக்கு பலவீனமாக அமைந்து தோல்வியை கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே வெற்றிக்கு இந்திய அணியினருடன் நட்பை ஆற்றாமல் விளையாடுங்கள் என்று அவர் பாகிஸ்தானுக்கு அறிவுரை தெரிவித்துள்ளார்.

இது பற்றி மொய்ன் கான் பேசியது பின்வருமாறு. “இப்போதெல்லாம் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளில் மோதல்களை என்னால் பார்க்க முடியவில்லை. இப்போதெல்லாம் இந்திய வீரர்கள் களத்திற்கு வந்ததும் பாகிஸ்தான் வீரர்கள் அவர்களுடைய பேட்டை பார்த்து, அவர்களுடைய தோளில் தட்டிக் கொடுத்து, நட்பாக பேசுகிறார்கள். அந்த வகையில் தற்போது இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது நமது வீரர்களின் செய்கைகள் என்னால் புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது”

- Advertisement -

சண்டை போடுங்க:

“களத்திற்கு வெளியேயும் நீங்கள் சில கட்டுப்பாடுகளை கொண்டிருக்க வேண்டும். இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது அவர்களிடம் கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல் பேச்சுக் கூட கொடுக்காமல் களத்தில் அதிரடியாக விளையாட வேண்டும் என்று எங்கள் சீனியர்கள் எங்களிடம் சொல்வார்கள். ஆனால் தற்போது நீங்கள் நட்பாக பேசும் போது அது பலவீனமாக இருப்பதற்கான அறிகுறியாக தெரிகிறது”

இதையும் படிங்க: ஐசிசி அண்டர்-19 மகளிர் உ.கோ 2025: செமி ஃபைனலில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா.. ஃபைனலில் மோதுவது யார்?

“இருப்பினும் இதை நம்மளுடைய வீரர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன். எப்படி இருந்தாலும் களத்தில் நட்பாக செயல்படுவது உங்களுடைய பலவீனத்தை வெளிப்படுத்துவதற்கான அறிகுறி. அது தாமாக உங்களுடைய செயல்பாடுகளில் அழுத்தத்தை உண்டாக்கும்” என்று கூறினார். அதாவது நட்பாக இல்லாமல் சண்டை போட்டு விளையாடுங்கள் என்று அவர் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement