தோனி உண்மையில் நல்ல கேப்டனே கிடையாது. அவர் வேற மாதிரி – சி.எஸ்.கே வீரர் அதிரடி பேட்டி

Mohith-2
- Advertisement -

2007 ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்றதிலிருந்து அவர் கேப்டன் பதவியை விட்டு விலகியது வரை அவர் சந்தித்த சவால்கள் ஏராளம். அந்த சவால்களுக்கு இடையே 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை, 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை, 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடர் என பல தொடர்களில் வெற்றி பெற்றார்.

dhoni

- Advertisement -

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு சென்றது. அடுத்தடுத்து பல சாதனைகளை படைத்தவர். மேலும், ஆடுகளத்தில் பெரிதாக தனது எண்ண ஓட்டங்களை காண்பிக்காமல் செய்யவேண்டியதை சரியாக செய்து வெற்றி பெறக் கூடியவர். தனது வீரர்களிடம் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பதையும் அவர்களை எப்படி பயன்படுத்துவது என்பதையும் சரியாக தெரிந்து வைத்திருந்தவர் தோனி.

அதே நேரத்தில் வெற்றிகள் வரும்போது அணியோடு அணியாக ஒரு வீரராக இருந்து கொள்வார். இந்திய அணி தோல்வியைத் தழுவும் போது ஒரு கேப்டனாக அதற்கு பொறுப்பேற்று வந்து நின்று பதில் கூறுவார். இப்படிப்பட்ட ஒரு கேப்டனாக தோனி இருந்துவருகிறார். இந்நிலையில் தோனியுடன் இந்திய கிரிக்கெட் அணியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய மோகித் சர்மா தோனியின் தலைமைப் பண்பு குறித்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Mohith 1

நான் விளையாடிய வீரர்களுடன் தோனியை ஒப்பிட்டு பார்க்கும் போது மற்ற வீரர்களிடமிருந்து அவர் தனித்து இருக்கிறார். அவரிடம் பணிவு மற்றும் நன்றியுணர்வு அதிகம் இருக்கிறது. மிகவும் எளிமையானவர். விளையாட்டில் கேப்டனுக்கும் தலைவனுக்கும் வித்தியாசம் இருக்கிறது. தோனி ஒரு உண்மையான தலைவன்.

- Advertisement -

அணி வெற்றி பெறும் போதெல்லாம் தனக்கு பங்கு இருப்பதாக காட்டிக்கொள்ள மாட்டார். ஆனால் தோல்வியை சந்தித்தால் தயங்காமல் எப்போதும் அதற்கான பொறுப்பை ஏற்று முன் நின்று பதில் கூறுவார். அதுவே ஒரு தலைவனுக்கான அறிகுறியாகும். இதுவே அவரிடம் எனக்கு பிடித்த விஷயம் என்று தோனியை பற்றி புகழ்ந்து கூறியுள்ளார் மோகித் சர்மா.

மோஹித் சர்மாவின் இந்த கருத்து முற்றிலும் உண்மை என்பதனை தோனி பலமுறை நிரூபித்து இருக்கிறார்.ஒரு உண்மையான தலைவன் வெற்றியை தனது அணி வீரர்களுக்கு கொடுத்து கொண்டாடுவார்கள்.அதேபோன்று பல வெற்றிக்கோப்பைகளை தோனி தனது அணிவீரர்களிடம் கொடுத்து தான் கடைசி இடத்தில் நின்று புகைப்படம் எடுத்து கொண்டதை நாம் பலமுறை கண்கூட பார்த்திருக்கிறோம். நிச்சயம் தோனி மோஹித் சர்மா கூறியது போல கேப்டன் இல்லை உண்மையான தலைவன் தான்.

Advertisement