தோணிக்கே தண்ணி காட்டிய முன்னாள் சென்னை வீரர் – ஏன் ,எதற்கு தெரியுமா ?

sharma

பஞ்சாப் அணியின் இந்த வெற்றிக்கு கேப்டன் அஸ்வினின் சிறப்பான கேப்டன்ஷிப்பும், இறுதி ஓவரை புத்திசாலித்தனமாக வீசிய மோகித்சர்மாவுமே முக்கிய காரணம்.பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கிடையிலான போட்டி கண்டிகரில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர்களில் 197 ரன்களை குவித்தது.

bravocsk

கடந்த போட்டிகளில் விளையாடாத பெங்களூரு அணியின் கிறிஸ்கெயில் களமிறங்கி அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.கிறிஸ்கெயில் இந்தப்போட்டியில் 33 ரன்களில் 63 ரன்களை குவித்து அசத்தினார்.பின்னர் 20ஓவர்களில் 198 ரன்களை எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கியது சென்னை சூப்பர்கிங்ஸ் அணி.

- Advertisement -

பரபரப்பான இந்த போட்டியில் 19 ஓவர்களில் 181 ரன்களை எடுத்து கடைசி ஓவரின் 6 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது.களத்தில் தோனியும் , பிராவோவும் நிற்க இறுதி ஓவரை மோகித்சர்மா பந்துவீச வந்தார். கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியின்போதும் கடைசி ஓவரில் 17ரன்கள் தேவைப்பட்ட போது பிராவோ மற்றும் ஜடேஜா வானவேடிக்கைகளை நிகழ்த்தி ஒரு பந்து மீதமிருக்கையிலேயே சென்னை அணியை வெற்றி பெற செய்தது போல இந்த போட்டியிலும் தோனியும்,ஜடேஜாவும் சென்னை அணியை வெற்றிபெற வைப்பார்கள் என ரசிகர்கள் நம்பிக்கொண்டு இருந்தனர்.

ஆனால் பஞ்சாப் அணியின் மோகித்சர்மாவின் பந்துவீச்சு சென்னை அணி ரசிகர்களின் கனவை சின்னாபின்னமாக்கியது.19வது ஓவரின் முதல்பந்தை எதிர்கொண்ட பிராவோவினால் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது.இரண்டாவது பந்தை எதிர்கொண்ட தோனி ஆப்சைடில் வந்த பந்தை வைடு என்று நினைத்து மிஸ்செய்தார். ஆனால் அது லைனுக்கு மேல் சரியாக சென்றதால் அம்பயர் வைடு தராததினால் சென்னை அணி 4பந்துகளில் 16 ரன்கள் தேவை என்கிற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.

- Advertisement -

மீண்டும் ஆப்சைடில் மோகித்சர்மா பந்தை வீச இம்முறை அது வைடாக மாறியது.இதனால் 4பந்துகளில் 15 ரன்கள் தேவையென்கிற நிலையில் மூன்றாவது பந்தை மீண்டும் ஆப்சைடில் வீச அதை சாமர்த்தியமாக பவுண்டரிக்கு விரட்டினார் தோனி. இதனால் சென்னை அணி வெற்றிபெற 3பந்துகளுக்கு 11ரன்கள் தேவை என்கிற நிலை ஏற்பட்டது.4வது பந்தை மோகித்சர்மா மீண்டும் ஆப்சைடில் வீச அது தோனியால் சரியாக கணித்து ஆட முடியாமல் மீண்டும் டாட் பால் ஆனது.

கடைசி இரண்டு பந்தில் இரண்டு சிக்ஸர் அடித்தால் சென்னை அணி வெற்றி, ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தால் சூப்பர் ஓவர் என்கிற பரபரப்பான சூழலில் ஐந்தாவத பந்தையும் ஆப்சைடில் மோகித்சர்மா வீச தோனி அந்த பந்தை அடித்த போதிலும் ரன் ஏதும் அடிக்கமுடியாமல் போனது.சென்னை அணிக்கு கடைசி ஒருபந்தில் 11ரன்கள் தேவை என்கிற நிலையில் பஞ்சாப் அணியின் வெற்றி உறுதியாகிவிட மோகித்சர்மா வீசிய கடைசி பந்தில் சிக்க்ஸர் அடித்து தோனி சென்னை ரசிகர்களை சமாதானப்படுத்தினார்.

கடைசி ஓவரில் அஸ்வின் மோகித்சர்மாவை பந்துவீச அழைத்ததும், பந்துவீச வந்த மோகித்சர்மா போட்டியின் சூழ்நிலையை சரியாக கணித்து ஆப்சைடில் மட்டுமே மீண்டும் மீண்டும் பந்துவீசி தோனி போன்ற பெரிய பேட்ஸ்மேனை கட்டுப்படுத்தியது சாமர்த்தியமான செயல் தான்.

Advertisement