IPL 2023 : வீட்ல உட்காந்துருந்தேன், அவர் தான் நெட் பவுலரா கூட்டிகிட்டு வந்து காப்பாத்துனாரு – மோஹித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி

Mohit Sharma
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெற்ற 18வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த குஜராத் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது. மொகாலியில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவர்களில் போராடி 153/8 ரன்கள் சேர்ந்தது. அதிகபட்சமாக மேத்தியூ சார்ட் 36 (24) ரன்களும் ஜிதேஷ் சர்மா 25 (23) ரன்களும் ஷாருக்காம் 22 (9) ரன்களும் எடுக்க குஜராத் சார்பில் அதிகபட்சமாக மோகித் சர்மா 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 174 ரன்களை துரத்திய குஜராத்துக்கு ரித்திமான் சஹா ஆரம்பத்திலேயே 30 (19) ரன்கள் விளாசி அதிரடியான தொடக்கம் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த சாய் சுதர்சன் 19, ஹர்திக் பாண்டியா 8 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் நிலைத்து நின்று விளையாடிய சுப்மன் கில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 67 (49) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஷாம் கரண் வீசிய கடைசி ஓவரில் பரபரப்பு ஏற்பட்டாலும் பவுண்டரியுடன் ராகுல் திவாடியா 5* (2) ரன்களும் டேவிட் மில்லர் 17* (18) ரன்களும் எடுத்ததால் 19.5 ஓவரில் 154/4 ரன்கள் எடுத்த குஜராத் சிறப்பான வெற்றி பெற்றது.

- Advertisement -

திரும்பிய மோஹித்:
மறுபுறம் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்ட பஞ்சாப் பந்து வீச்சில் போராடியும் வெற்றி காண முடியவில்லை. இந்த வெற்றிக்கு பஞ்சாப்பை பேட்டிங்கில் அதிரடி காட்ட விடாமல் 4 ஓவரில் வெறும் 18 ரன்களை மட்டும் 4.50 என்ற இதர குஜராத் பவுலர்களை காட்டிலும் குறைவான எக்கனாமியில் பந்து வீசி ஜிதேஷ் சர்மா, சாம் கரண் ஆகிய 2 அதிரடி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை சாய்த்து முக்கிய பங்காற்றிய மூத்த வீரர் மோகித் சர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

கடந்த 2013இல் அறிமுகமாகி 2014ஆம் ஆண்டு தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஊதா தொப்பியை வென்ற அவர் இந்தியாவுக்காகவும் அறிமுகமாகி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2015 உலக கோப்பையில் விளையாடினார். இருப்பினும் நாளடைவில் அதை தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு அசத்த தவறிய அவர் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட நிலையில் ஐபிஎல் தொடரிலும் ரன்களை வாரி வழங்கினார்.

- Advertisement -

அதனால் 2020 சீசனுடன் யாரும் வாங்காத அவர் கடந்த வருடம் குஜராத் அணியில் நெட் பவுலராக செயல்பட்டது ரசிகர்களுக்கு சோகமாக அமைந்தது. இருப்பினும் மனம் தளராமல் போராடிய அவர் கடந்த போட்டியில் ரிங்கு சிங்கிடம் 5 சிக்சர்களை கொடுத்த யாஷ் தயாளுக்கு பதிலாக இப்போட்டியில் விளையாடும் வாய்ப்பு பெற்று வெற்றி பெற வைத்து 34 வயதில் மீண்டும் மிகச் சிறந்த கம்பேக் கொடுத்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில் நெட் பவுலராக செயல்பட்டது அவமானம் இல்லை என்று தெரிவிக்கும் மோகித் சர்மா குஜராத் பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ரா தான் வீட்டில் உட்கார்ந்திருந்த தம்மை முதலில் அந்த வேலைக்கு அழைத்து தற்போது மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடும் அளவுக்கு உயர்த்தியதாக நெகிழ்ச்சியுடன் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார். இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “சில வருடங்களுக்குப் பின் கம்பேக் கொடுப்பது ஆவலாகவும் அதே சமயம் பதற்றமாகவும் இருக்கிறது. இருப்பினும் இந்த இடைப்பட்ட காலங்களில் நான் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடினேன்”

இதையும் படிங்க:GT vs PBKS : ஜெயிச்சாலும் இந்த விஷயத்தை நான் ஏத்துக்கவே மாட்டேன். குஜராத் வீரர்களை கடிந்த – ஹார்டிக் பாண்டியா

“குறிப்பாக கடந்த வருடம் காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு நான் உள்ளூர் போட்டியில் விளையாடியது பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. கடந்த வருடம் ஆஷிஷ் நெஹ்ரா அவர்கள் என்னை அழைத்து குஜராத் அணியுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பதற்கு பதிலாக குஜராத் அணியில் நெட் பவுலராக செயல்படலாம் என்று நான் நினைத்தேன். நெட் பவுலராக இருப்பது மோசமானதல்ல. அது உங்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கிறது. குஜராத் அணியில் நல்ல சூழ்நிலை நிலவுகிறது” என்று கூறினார்.

Advertisement