- Advertisement -
ஐ.பி.எல்

நான் தான் முட்டாள்ன்னு என்னையும் சஹரையும்.. தோனி கெட்ட வார்த்தையில் திட்டிருக்காரு.. மோஹித் சர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ளார். அதே போல ஐபிஎல் தொடரிலும் 5 கோப்பைகளை வென்றுள்ள அவர் வெற்றிகரமான கேப்டனாக போற்றப்படுகிறார். முன்னதாக தோனி என்றாலே பெரும்பாலும் அழுத்தமான சூழ்நிலைகளிலும் பதற்றமடையாமல் அமைதியாக தைரியமான முடிவுகளை எடுப்பதில் சிறந்தவராக அறியப்படுகிறார்.

அதனால் அவரை கேப்டன் கூல் தோனி என்று பலரும் அழைப்பது வழக்கமாகும். ஆனால் மனிதர் என்பதை நிரூபிக்கும் வகையில் தோனியும் அவ்வப்போது நான் கோபமடைந்துள்ளார். அந்த வகையில் 2019 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் போது தீபக் சஹரை மீண்டும் மீண்டும் மோசமாக பந்து வீசினார்.

- Advertisement -

கோபமான தோனி:

அப்போது அவரிடம் சென்ற தோனி ஏதோ கடுமையான வார்த்தைகளால் பேசினார். ஆச்சரியப்படும் வகையில் அதன் பின் சிறப்பாக பந்து வீசிய தீபக் சஹர் சிஎஸ்கே வெற்றி பெற உதவினர். இந்நிலையில் தோனி அப்போட்டியில் தீபக் சஹரை என்ன சொல்லி திட்டினார் என்ற விவரங்களை மோகித் சர்மா பகிர்ந்துள்ளார். அத்துடன் தோனி கோபமடைந்தால் சரியாக வீசாத பவுலர்களை கெட்ட வார்த்தையில் திட்டுவார் என்றும் மோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “தோனியிடம் நான் நிறைய திட்டுக்களை வாங்கியுள்ளேன். இருப்பினும் களத்தில் நடப்பதெல்லாம் அங்கேயே இருக்கும் என்று தோனி சொல்வார். பின்னர் அதைப்பற்றி உங்களுக்கு அவர் புரியவும் வைப்பார். வேகப்பந்து வீச்சாளராக நீங்கள் அவ்வப்போது கவனத்தை இழப்பீர்கள்”

- Advertisement -

சஹருக்கு திட்டு:

“தீபக் சஹரும் நிறைய திட்டுகளை வாங்கியுள்ளார். 2019 ஐபிஎல் தொடரில் அவர் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார். நான் விளையாடவில்லை. சென்னையில் நடைபெற்ற அப்போட்டியில் அனைவரும் வியர்வை பொங்க விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது நக்குல் பாலை வீசிய சஹர் புல் டாஸ் போட்டு பவுண்டரி அல்லது சிக்ஸர் கொடுத்தார் என்று நினைக்கிறேன். அதனால் மஹி பாய் மீண்டும் அதை வீசாதீர்கள் என்று அவரிடம் சொன்னார்”

இதையும் படிங்க: ஐசிசி தரவரிசையிலும் ரிஷப் பண்ட் மாஸ் கம்பேக்.. ஜொலிக்கும் அஸ்வின்.. கில் முன்னேற்றம்.. ரோஹித், கோலி சரிவு

“அதற்கு ஓகே மஹி பாய் என்று சொன்ன சஹர் மீண்டும் சில பந்துகளுக்கு பின் நக்குல் பந்தை வீசினார். அது பேட்ஸ்மேன் தலைக்கு மேலே சென்றது. அப்போது சஹாரிடம் சென்ற தோனி அவருடைய தோள் மீது கை போட்டு சில விஷயங்களை சொன்னார். போட்டி முடிந்த பின் தோனி என்ன சொன்னார்? என்று அவரிடம் கேட்டோம். அதற்கு “நீங்கள் முட்டாள் இல்லை. நான் தான் முட்டாள்” என்று சில கெட்ட வார்த்தைகளுடன் தோனி சொன்னதாக சஹார் கூறினார். அதே சமயம் தோனி பாய் சஹரை சமமாக விரும்புவார்” என்று கூறினார்.

- Advertisement -