இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்று சாதனைப் படைத்துள்ளார். 5 ஐபிஎல் மற்றும் 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் வென்றுள்ள அவர் களத்தில் பெரும்பாலும் பொறுமையுடன் அமைதியாக செயல்படுவார். அதனாலேயே பலரும் அவரை கேப்டன் கூல் தோனி என்று அழைப்பது வழக்கமாகும்.
ஆனால் அவரும் பல தருணங்களில் களத்தில் தம்முடைய கோபத்தை வெளிப்படுத்தி மனிதன் என்பதை நிரூபித்துள்ளார். அதற்கு எடுத்துக்காட்டாக 2014 சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஒரு சிறிய தவறுக்காக தோனி தம்மை கடுமையாக திட்டியதாக இந்திய வீரர் மோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 2014 ஐபிஎல் தொடரில் தோனி தலைமையில் விளையாடிய அவர் அதிக விக்கெட்டுகள் எடுத்து ஊதா தொப்பியை வென்றார்.
திட்டிய தோனி:
அதனால் 2015 உலகக் கோப்பையில் தோனி தலைமையில் விளையாடிய மோஹித் சர்மா தற்போது குஜராத்துக்காக விளையாடி வருகிறார். அப்படி களத்தில் திட்டினாலும் களத்திற்கு வெளியே வாழ்க்கையைப் பற்றி தோனியிடம் நிறைய கற்றுக் கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி மோஹித் பேசியது பின்வருமாறு. “தோனி பாயுடன் நான் நிறைய தருணங்களைக் கொண்டுள்ளேன்”
“மிகவும் அமைதியான அவர் தன்னுடைய பொறுமையை இழப்பதை நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள். இளம் பயனாக அவர் உங்கள் மேலே பொறுமையிழப்பது உங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். ஒருமுறை சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் கொல்கத்தாவுக்கு எதிராக மஹி பாய் ஈஸ்வர் பாண்டேவை பவுலிங் செய்ய அழைத்தார்”
தோனியிடம் கத்துக்கலாம்:
“ஆனால் அப்போது அவர் என்னை அழைப்பதாக நான் நினைத்துக் கொண்டு பந்து வீச ஓடினேன். அதைப் பார்த்த மஹி பாய் என்னை அழைக்கவில்லை என்று சொன்னார். ஆனால் அம்பயர் என்னைத் தொடர்ந்து பந்து வீச சொன்னதால் கோபமடைந்த அவர் பொறுமையிழந்து என்னை திட்டினார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் யூசுப் (பதான்) பாய் விக்கெட்டை நான் முதல் பந்திலேயே எடுத்தேன். அப்போது அனைவரும் விக்கெட்டை கொண்டாடிய நிலையில் கூட தோனி என்னை லேசாக திட்டினார்”
இதையும் படிங்க: இதை சொன்னதுக்கு திட்டுனேன்னு நினச்சு.. ஜோ ரூட் என்னை மோசமா திட்டுனாரு.. சண்டை பற்றி கிருஷ்ணா பேட்டி
“அதே சமயம் களத்திற்கு வெளியே தோனி விஷயங்களைக் கற்றுக் கொடுக்க விரும்புவார். அவருடன் அமர்ந்து பேசும் போதெல்லாம் விளையாட்டைத் தாண்டி நீங்கள் நிறையக் கற்றுக்கொள்ளலாம். கிரிக்கெட் எப்படி ஒரு மனிதனை நன்றாக மாற்றும் என்பதையும் அவர் கற்றுக்கொடுப்பார். அனைத்தையும் எளிமையாக வைத்திருக்க முயற்சிப்பார் என்பதே தோனியை பற்றிய நல்ல விஷயமாகும். களத்தில் நடக்கும் அணி மீட்டிங்கில் 99% நேரங்களில் அவர் கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்கள் மற்றும் திட்டங்களைப் பற்றி மட்டுமே பேசுவார்” என்று கூறினார்.



