பர்ஸ்ட் கஷ்டமாதான் இருந்தது.. அப்புறம்.. சாம்பியன்ஸ் டிராபி நீக்கம் குறித்து மனம்திறந்த – முகமது சிராஜ்

Siraj
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இளம் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வரும் முகமது சிராஜ் கடைசியாக இந்தியாவில் நடைபெற்ற 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் மற்றும் 2024 டி20 உலக கோப்பை ஆகிய தொடர்களில் இந்திய அணிக்காக இடம் பெற்று மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார். இதன் காரணமாக இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராகவும் பார்க்கப்பட்டு வருகிறார்.

எனக்கும் முதல்ல கஷ்டமா தான் இருந்தது : முகமது சிராஜ்

ஆனால் அண்மையில் நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா காயம் காரணமாக இடம்பெறாத வேளையில் முகமது சிராஜுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது அவருக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்திருந்தது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இடம் பெற்றனர்.

- Advertisement -

அவர்களை தவிர்த்து ஐந்து சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் தான் சிறப்பாக செயல்பட்டும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வாய்ப்பு பெறாதது குறித்து மனம் திறந்து பேசியுள்ள முகமது சிராஜ் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : எப்பொழுதுமே நம் நாட்டிற்காக விளையாடும்போது நம்பிக்கையுடன் விளையாட வேண்டும்.

ஒரு தேசிய வீரராக ஐசிசி போட்டிகளில் விளையாட வேண்டும் என்கிற ஆசை அனைவருக்கும் இருக்கும் அந்த வகையில் எனக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட வேண்டும் என்ற ஆசை இருந்தது. முதலில் நான் சாம்பியன்ஸ் டிராபி அணியிலிருந்து நீக்கப்பட்டபோது எனக்கும் ஏற்றுக்கொள்ள சற்று கடினமாக தான் இருந்தது. ஆனாலும் கேப்டன் ரோஹித் சர்மா அணியின் நலனுக்கு என்ன தேவையோ அதனை செய்துள்ளார்.

- Advertisement -

துபாய் மைதானத்தில் சுழற்பந்து வீச்சுக்கு அதிக சாதகம் இருப்பதனாலே அவர் அந்த முடிவை எடுத்துள்ளார். எனவே என்னை நீக்கியதை பற்றி நான் பெரிதாக யோசிக்கவில்லை. மீண்டும் எனது திறனை வெளிப்படுத்தி நிரந்தர இடத்தை பிடிக்க விரும்புகிறேன். அதே போன்று சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கிடைத்த ஓய்வு என்னுடைய உடற்தகுதி ரீதியாகவும், பந்துவீச்சு துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள உதவியது.

இதையும் படிங்க : இந்த 2025 ஐ.பி.எல் தொடரின் டேஞ்சரான ஓபனிங் ஜோடி இவங்கதான் – சுரேஷ் ரெய்னா கணிப்பு

எதிர்வரும் 2025 ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக பந்துவீச தயாராகி உள்ளேன் என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடிய அவரை பெங்களூரு அணி கழட்டி விட்டிருந்த வேளையில் குஜராத் அணி அவரை மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement