- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவங்கள எப்படி ட்ரீட் பண்ணனும்னு விராட் கோலி தான் கத்து குடுத்தார்.. அதன் அக்ரெஷனுக்கு காரணம் – சிராஜ் பகிர்வு

இங்கிலாந்து அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற முடிந்த ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், அனுபவ வீரருமான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அதன்காரணமாக இம்முறை விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் அஸ்வின் போன்ற முன்னணி வீரர்கள் பலர் இல்லாமல் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியானது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

விராட் கோலியிடம் இருந்து கற்றுக்கொண்டது குறித்து பேசிய : முகமது சிராஜ்

அதன்படி நடைபெற்று முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்திருந்த வேளையில் இந்த தொடரில் இந்திய அணியின் சிறப்பான செயல்பாட்டிற்கு வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

- Advertisement -

ஏனெனில் இந்த தொடரின் போது பும்ரா மூன்று போட்டியில் மட்டுமே விளையாடிய வேளையில் முகமது சிராஜ் ஓய்வின்றி 5 போட்டிகளில் விளையாடி அதிக ஓவர்களை வீசி இந்திய அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி இருந்தார். இந்த தொடரின் போது விராட் கோலி இல்லாத வேளையில் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் அவ்வப்போது இங்கிலாந்து வீரர்களுடன் வார்த்தை முதலில் ஈடுபட்டு ஆக்ரோஷமான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.

இப்படி முகமது சிராஜ் தான் ஆக்ரோஷமாக களத்தில் செயல்பட முக்கிய காரணமே விராட் கோலி கற்றுக் கொடுத்த சில பாடங்கள்தான் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவதை நான் விராட் கோலியிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.

- Advertisement -

எப்பொழுதுமே எந்த அணிக்கு எதிராக நாம் விளையாடினாலும் அவர்களை எதிரிகளாக பார்க்க வேண்டும் என்று கோலி என்னிடம் கூறுவார். அந்த வகையிலேயே நான் பந்துவீசும் போது எந்த எதிரணியாக இருந்தாலும் அவர்களை எதிரியாக பாவித்து ஆக்ரோஷமான செயல்பாட்டை வெளிப்படுத்துவேன். நான் ஒருவேளை என்னுடைய ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தவில்லை எனில் என்னால் அப்போது சிறப்பாக செயல்பட முடியாது.

இதையும் படிங்க : ஜஸ்ப்ரீத் பும்ரா இல்லாதபோது அசத்த என்ன காரணம்? பலநாள் கேள்விக்கு பதிலளித்த – முகமது சிராஜ்

ஆர்.சி.பி அணியில் இணைந்ததும் விராட் கோலியுடன் நல்ல உறவு கிடைத்தது. அவரிடம் இருந்து நாங்கள் வெற்றிக்கான வேட்கையை கற்றுக் கொண்டோம். களத்திற்கு வெளியே இருக்கும் விராட் கோலி வேறு, போட்டியின் போது களத்தில் வெற்றிக்காக போராடும் விராட் கோலி வேறு என முகமது சிராஜ் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -