இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரின் போது அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இந்திய அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக திகழ்ந்தார். இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது.
பும்ரா இல்லாத போது நான் சிறப்பாக செயல்பட இதுவே காரணம் : முகமது சிராஜ்
ஆனால் கடைசி டெஸ்ட் போட்டியின் போது அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணி அந்த போட்டியில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்தது. இப்படி இந்திய அணி இந்த கடைசி போட்டியில் வெற்றி பெறவும், இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் சமன் செய்யவும் மிக முக்கியமான காரணமாக முகமது சிராஜ் திகழ்ந்தார்.
இந்த தொடரில் மட்டும் கிட்டத்தட்ட 180 ஓவர்களுக்கு மேல் வீசிய அவர் இந்திய அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக திகழ்ந்தார். அதிலும் குறிப்பாக பும்ரா இல்லாத வேளையில் பந்துவீச்சு யூனிட்டின் லீடராக இருந்த சிராஜ் சிறப்பாக செயல்பட்டு அசத்தியிருந்தார். பும்ரா இல்லாத 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றபோது அந்த 2 போட்டிகளிலும் சிராஜ் அற்புதமாக பந்துவீசியிருந்தார்.
இந்நிலையில் பும்ரா இல்லாத போது தான் எவ்வாறு சிறப்பாக விளையாடினேன்? என்பது குறித்த சில தகவல்களை முகமது சிராஜ் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : பும்ரா போன்ற ஒரு பெரிய வீரர் இல்லாதபோது முழு பொறுப்பும் என் மீது இருக்கும் என்று எனக்கு தெரியும். எனவே அவர் இல்லாத இடத்தை நான் நிரப்ப வேண்டும் என்று நினைத்தே முழு நம்பிக்கையுடன் பந்து வீசுனேன்.
அந்த வகையிலே இங்கிலாந்து தொடரில் மிகச் சிறப்பாக பந்துவீசியிருந்தேன். எட்ஜ்பேஸ்டன் போட்டியின் போது என்னைப் பற்றி நிறைய பேர் விமர்சித்து இருந்தார்கள். அவர்கள் விமர்சனத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காகவும் சிறப்பாக செயல்பட்டேன். எப்பொழுதுமே என்னுடைய அணியில் பொறுப்பை எடுத்து செயல்படுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.
இதையும் படிங்க : 2012-ல ஜோ ரூட்டை பார்த்ததும் எங்க டீம் பிளேயர்ஸ் கிட்ட சொல்லிட்டேன்.. ஜோ ரூட் குறித்து – சச்சின் கருத்து
அந்த வகையில் தான் பும்ரா இல்லாத வேளையில் பொறுப்பை நான் கையில் எடுத்து என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்குகிறேன். இந்திய அணியின் வெற்றியே எனக்கு எப்போதும் அவசியம் அதற்கான பங்களிப்பை நான் தொடர்ந்து வழங்க தயாராக இருக்கிறேன் என முகமது சிராஜ் கூறியது குறிப்பிடத்தக்கது.



