பும்ரா இல்லாததால எனக்கு அந்த பொறுப்பு இருக்கு.. 6 விக்கெட் வீழ்த்தியது குறித்து பேசிய – முகமது சிராஜ்

Siraj
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியானது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி 587 ரன்கள் குவித்து அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியது. அதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி துவக்கத்திலிருந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் ஹாரி ப்ரூக் மற்றும் ஜேமி ஸ்மித் ஆகியோரது சதத்தினால் ஓரளவு டீசன்டான ரன் குவிப்பை வழங்கியது.

பும்ரா இல்லாததால் பொறுப்பு எனக்கு இருக்கு : முகமது சிராஜ்

இறுதியில் இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் 180 ரன்கள் முன்னிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணியானது நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 64 ரன்கள் குவித்து இருந்தது. இதன் மூலம் 244 ரன்கள் முன்னிலையுடன் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி விளையாடுகிறது.

- Advertisement -

நேற்றைய போட்டியின் போது இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய முகமது சிராஜ் 70 ரன்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் அவரது இந்த சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய அவர் கூறுகையில் : உண்மையிலேயே என்னுடைய இந்த சிறப்பான பந்துவீச்சு நம்ப முடியாத அளவிற்கு இருந்தது.

ஏனெனில் நான் நீண்ட நாட்களாகவே சிறப்பாக பந்து வீசினாலும் பெரிய அளவில் விக்கெட்டுகளை வீழ்த்தாமல் இருந்து வந்தேன். இந்த மைதானத்தில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளேன். ஆனால் இப்போது முதல் முறையாக 6 விக்கெட்டை வீழ்த்துவது மகிழ்ச்சியாக உள்ளது. பும்ரா இல்லாததால் நான் தான் இந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட்டை வழிநடத்த வேண்டும்.

- Advertisement -

அதனால் நிறைய யோசிக்காமல் சரியான லைன் அன்ட் லெந்தில் ஒழுக்கமாக பந்து வீசவேண்டும் என்று மட்டும் நினைத்தேன். அதே போன்று ஆகாஷ் தீப் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ஒரு சில டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளனர். அதனால் அனுபவ வீரராக நான் தான் முன்னின்று அவர்களுக்கும் திட்டத்தை வகுக்க வேண்டும். இதுபோன்ற பொறுப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த பொறுப்பை உணர்ந்து சிறப்பாக செயல்பட்டுள்ளேன்.

இதையும் படிங்க : டிஎன்பிஎல்: 4, 6, 6, 6, 6, 6.. சேப்பாக்கை வீட்டுக்கு அனுப்பிய விமல் குமார் மாஸ் சாதனை.. ஃபைனல் சென்ற திண்டுக்கல்

பும்ரா இல்லாததால் இந்திய அணியை பந்துவீச்சில் வழிநடத்த வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது. அதற்கு தகுந்தார் போன்று செயல்பட்டுள்ளதாக உணர்ந்துள்ளேன். இந்திய அணி தற்போது நல்ல நிலையில் உள்ளது நான்காம் நாள் ஆட்டத்தில் நிறைய ரன்கள் அடிக்கும் பட்சத்தில் எங்களால் வெற்றி பெறவும் முடியும் என முகமது சிராஜ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement