அண்மையில் நடைபெற்று முடிந்த 2025-ஆம் ஆண்டிற்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணியை தோற்கடித்த இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
அணித்தேர்வு என் கையில் இல்லை : முகமது சிராஜ் கருத்து
இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் ஜஸ்ப்ரீத் பும்ரா இடம் பெறாததால் அவருக்கு பதிலாக முகமது சிராஜ் பந்துவீச்சு யூனிட்க்கு தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பும்ராவிற்கு பதிலாக கடிச்சி நேரத்தில் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டார். அதே வேளையில் முகமது சிராஜுக்கு இடம் கிடைக்காமல் போனது அப்போதே பெரிய அளவில் பேசப்படும் விடயமாக மாறியது.
ஏனெனில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முகமது ஷமி மட்டுமே அனுபவம் வாய்ந்த வீரராக இந்திய அணியில் இருந்தார். அவரை தவிர்த்து அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா ஆகிய இளம் வீரர்கள் மட்டுமே அணியில் இடம் பிடித்திருந்தனர். அந்த தொடருக்கு முன்னதாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் முகமது சிராஜின் நீக்கம் குறித்து பேசியிருந்த ரோகித் சர்மா கூறுகையில் :
பும்ரா விளையாடுவாரா? இல்லையா? என்பது எங்களுக்கு தெரியவில்லை என்பதனால் புதிய பந்தையும், பழைய பந்தையும் சேர்ந்து வீசக்கூடிய ஒரு பந்து வீச்சாளராக அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம். சிராஜ் புதிய பதில் மட்டுமே சிறப்பாக செயல்படுவார் என்பதனால் அவருக்கு வாய்ப்பு வழங்க முடியாமல் போனது என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தனக்கு இடம் கிடைக்காதது குறித்து தற்போது பேசியுள்ள முகமது சிராஜ் கூறுகையில் : அணியின் தேர்வு என்பது என் கைகளில் இல்லை. என் கைகளில் கிரிக்கெட் பந்து மட்டுமே இருக்கிறது. அதை வைத்து என்னால் முடிந்தவற்றை செய்ய காத்திருக்கிறேன். கடந்த சில வருடங்களாக ஓய்வின்றி விளையாடி வந்ததால் இந்த ஓய்வு எனக்கு மிகச் சிறப்பாக மீண்டு வர உதவி செய்துள்ளது.
இதையும் படிங்க : இந்தியாவுக்காக வெற்றிகளை பெற்றுக் கொடுப்பேன்.. அந்த ஃபார்மட்டில் சான்ஸ் கொடுங்க.. வெங்கடேஷ் கோரிக்கை
தற்போது புதிய பந்து மற்றும் பழைய பந்துகளில் எவ்வாறு பந்து வீச வேண்டும் என்பது குறித்து கடினமான பயிற்சியை எடுத்துள்ளேன். இந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட காத்திருக்கிறேன் என முகமது சிராஜ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.