ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பெர்த் நகரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
பந்துவீச்சுக்கு உதவிய பும்ரா :
இவ்வேளையில் இந்திய அணி தற்போது அடிலெய்டு மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் தனக்கு முதல் போட்டியின் போது பந்து வீச்சில் கிடைத்த வெற்றிக்கு கேப்டன் பும்ரா மற்றும் பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தான் காரணம் என்று கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்க்கல் என்னிடம் நீ ஒரு போர் வீரர் போன்று இந்திய அணிக்கு விக்கெட்டுகளை பெற்றுத்தர வேண்டும். அதனால் உங்களது பந்துவீச்சை ரசித்து செயல்படுத்துங்கள் என்று கூறினார்.
அதேபோன்று பும்ராவும் இந்த போட்டியின் போது என்னிடம் பேசிக்கொண்டே இருந்தார். ஓவர்களில் இடைவெளியில் விக்கெட்டை எடுத்தால் கூட கொண்டாட்டத்தில் ஓட வேண்டாம். ஏனெனில் விக்கெட் கொண்டாட்டத்தால் உங்களது பந்துவீச்சு லைன் மற்றும் லென்த் ஆகியவை மாறும்.எனவே ஒரே நேரத்தில் தொடர்ந்து பந்துவீசுங்கள்.
அப்படி ஒரே இடத்தில் பந்துவீசி ரசியுங்கள். ஒரே இடத்தில் தொடர்ச்சியாக பந்துவீசும் போது விக்கெட் விழவில்லை என்றால் என்னிடம் வந்து கேளுங்கள் என்று கூறினார். அதன் பிறகு நான் மிகச் சிறப்பாக பந்துகளையும் வீழ்த்தினேன்.
இதையும் படிங்க : ஜாம்பவான் டான் பிராட்மேனின் 76 வருட வாழ்நாள் உலக சாதனையை.. சமன் செய்யப் போகும் கிங் கோலி
ஆஸ்திரேலியா போன்ற மைதானங்களில் எப்பொழுதுமே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் எனவே ஒரு பந்துவீச்சாளராக நான் இங்கு ரசித்து பந்துவீசி வருகிறேன். நிச்சயம் இனி வரும் போட்டியிலும் எனது இந்த சிறப்பான பந்துவீச்சு தொடரும் என முகமது சிராஜ் கூறியது குறிப்பிடத்தக்கது.



