- Advertisement -
இந்திய கிரிக்கெட்

காவல்துறை டிஎஸ்பி’யாக பொறுப்பேற்ற இந்திய அணி வீரர் முகமது சிராஜ்.. இனிமேல் விளையாடுவாரா?

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் டெஸ்ட் அணியில் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருகிறார். கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான அவர் ஆரம்பத்திலேயே ரன்களை வாரி வழங்கினார். அதனால் உங்களுடைய தந்தையை போல் ஆட்டோ ஓட்ட செல்லுங்கள் என்று அவர் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தார்.

இருப்பினும் அதற்கெல்லாம் அசராத சிராஜ் தொடர்ந்து அப்போதைய கேப்டன் விராட் கோலியின் ஆதரவுடன் ஐபிஎல் தொடரில் அசத்தினார். அதனால் 2020 – 21 ஆஸ்திரேலிய சுற்றுப்பணத்தில் அவர் இந்தியாவுக்காக தேர்வானார். அப்போது லாக் டவுன் காரணமாக தனது தந்தை இயற்கை எய்திய போது கூட நாடு திரும்பாத அவருக்கு இந்தியாவுக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

டிஎஸ்பி சிராஜ்:

அந்த வாய்ப்பில் அசத்திய சிராஜ் ஆஸ்திரேலிய மண்ணில் 2வது முறையாக இந்தியா தொடரை வெல்ல முக்கிய பங்காற்றினார். அப்படியே 2023 ஆசியக் கோப்பை ஃபைனலில் இலங்கையை 50 ரன்களுக்கு சுருட்டிய அவர் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். மேலும் 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியிலும் தம்முடைய பங்காற்றிய சிராஜ் சாம்பியன் பட்டம் வென்றார்.

அந்த சூழ்நிலையில் தங்கள் மாநிலத்திலிருந்து சென்று இந்தியா 2024 டி20 உலகக்கோப்பையை முக்கிய பங்காற்றிய அவருக்கு ஒரு வீடும் அரசு வேலையும் வழங்கப்படும் என்று தெலுங்கானா மாநில முதலமைச்சர் கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தார். அதன் படி அக்டோபர் 11ம் தேதி தெலுங்கானா மாநில டிஜிபி உத்தரவின் பெயரில் முகமது சிராஜ் டிஎஸ்பி அதாவது துணைக் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

வெற்றிக்கு பரிசு:

அந்த வகையில் தெலுங்கானா அரசின் நியமன டிஎஸ்பியாக பொறுப்பேற்றுள்ள சிராஜ்க்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால் அவர் கிரிக்கெட்டிலிருந்து விலகப் போவதில்லை. இந்திய அணிக்காக விளையாடிய நேரம் தவிர்த்து விரும்பும் நேரங்களில் சிராஜ் அந்த பணியில் ஈடுபடலாம். அவருடன் 2 முறை குத்துச்சண்டை உலக சாம்பியன் நிகத் ஜரீனுக்கும் குரூப் 1 வேலையை தெலுங்கானா அரசாங்கம் கொடுத்துள்ளது.

இதையும் படிங்க: வங்கதேச அணிக்கெதிரான 3ஆவது டி20 போட்டியில் 2 மாற்றங்கள் நிகழ வாய்ப்பு – உத்தேச பிளேயிங் லெவன் இதோ

கடந்த காலங்களில் சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி ஆகியோரும் ராணுவத்தில் இப்படி உயரிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் தோனி விரும்பும் நேரங்களில் இந்திய ராணுவத்தின் பாராசூட் பிரிவில் பணியாற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதே போல முகமது சிராஜும் இந்த கௌரவ வேலையில் செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -