வங்கதேச அணிக்கெதிரான 3ஆவது டி20 போட்டியில் 2 மாற்றங்கள் நிகழ வாய்ப்பு – உத்தேச பிளேயிங் லெவன் இதோ

IND-vs-BAN
- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் முதல் இரண்டு போட்டிகளிலுமே மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஏற்கனவே இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

மூன்றாவது டி20 போட்டிக்கான பிளேயிங் லெவன் :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது அக்டோபர் 12-ம் தேதி ஐதராபாத் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் நிகழுமா? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

- Advertisement -

ஏனெனில் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி ஏற்கனவே இந்த டி20 தொடரை கைப்பற்றி விட்டதால் பென்ச்சில் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நாளைய மூன்றாவது போட்டியில் இந்திய அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்று தமிழக வீரரான வருண் சக்கரவர்த்திக்கு ஓய்வளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக முதன்மை சுழற்பந்து வீச்சாளரான ரவி பிஷ்னாய் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. அதேபோன்று இந்த தொடரில் அறிமுகமாகி அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய வேகப்பந்து வீச்சாளர் மாயங்க் யாதவிற்கு ஓய்வு வழங்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணாவிற்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

- Advertisement -

இதை தவிர்த்து வேறு எந்த மாற்றமும் இந்திய அணியில் இருக்காது என்று கருதப்படுகிறது. அந்த வகையில் வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : இதுமட்டும் நடந்தா விராட் கோலி மீண்டும் கேப்டனாவது உறுதி.. நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன?

1) சஞ்சு சாம்சன், 2) அபிஷேக் சர்மா, 3) சூரியகுமார் யாதவ், 4) நிதீஷ் ரெட்டி, 5) ஹார்டிக் பாண்டியா, 6) ரியான் பராக், 7) ரிங்கு சிங், 8) வாஷிங்டன் சுந்தர், 9) வருண் சக்ரவர்த்தி / ரவி பிஷ்னாய், 10) அர்ஷ்தீப் சிங், 11) மாயங்க் யாதவ் / ஹர்ஷித் ராணா.

Advertisement