
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
இந்தத் தொடரில் முதலாவதாக நடைபெற இருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு கொல்கத்தா சென்றடைந்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் வென்று நடப்பு சாம்பியனாக இந்திய அணிக்கு எதிராக விளையாட இருக்கும் தென்னாப்பிரிக்க அணி வலுவான அணியாக காணப்படுவதால் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை சமன் செய்த தென்னாப்பிரிக்க அணி நல்ல நம்பிக்கையோடு வருவதால் இந்திய அணிக்கு எதிராக கடுமையான சவாலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தான் காத்திருப்பதாக இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
கடைசியாக நடைபெற்ற இங்கிலாந்து தொடரின் போது இந்திய அணி இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் அந்த தொடரை சமன் செய்ய மிக முக்கியமான காரணமாக அமைந்தவர் முகமது சிராஜ். ஏனெனில் இங்கிலாந்து தொடரில் மட்டும் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி மிகச் சிறப்பான ஃபார்மில் அவர் இருந்து வருகிறார்.
இந்நிலையில் எதிர்வரும் இந்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து பேசிய அவர் கூறுகையில் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் சுழற்சியில் ஒரு தொடராகும். ஏற்கனவே அவர்கள் உலக டெஸ்ட் சாம்பியனாக இருப்பதனால் அவர்களுக்கு எதிராக நான் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்.
இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியின் ரேடாரில் கண்டிப்பாக அந்த 3 பேர் இருப்பாங்க.. அவர்களை சி.எஸ்.கே வாங்கும் – அஷ்வின் கருத்து
பாகிஸ்தான் மண்ணில் அவர்கள் டெஸ்ட் தொடரை சமன் செய்திருந்தாலும் இந்திய மண்ணில் நாம் அவர்களுக்கு கடுமையான சவாலை அளிப்போம் என்று நினைக்கிறேன். தனிப்பட்ட முறையில் நான் தற்போது மிகச் சிறப்பாக பந்துவீசி வருவதால் அதே பார்மை தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராகவும் வெளிப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்த காத்திருக்கிறேன் என முகமது சிராஜ் கூறியது குறிப்பிடத்தக்கது.