டி20 உலககோப்பை அணியில் இருந்து வெளியேறிய ஹர்ஷித் ராணாவிற்கு பதிலாக – மாற்றுவீரர் அறிவிப்பு

Mohammed Siraj
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கும் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனால் அண்மையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற பயிற்சி போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹர்ஷித் ராணாவிற்கு மாற்றுவீரர் அறிவிப்பு :

இந்திய அணியின் நம்பிக்கை வீரராக பார்க்கப்படும் இவர் நிர்வாகத்தின் மிகப்பெரிய ஆதரவுடன் மூன்று வகையான இந்திய அணியிலும் தொடர்ந்து இடம் பிடித்து விளையாடி வருகிறார். அதோடு அவரது பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் பயிற்சியாளர் கம்பீர் நம்பிக்கை வைத்துள்ளதால் அவரை எட்டாவது இடத்தில் களமிறங்கும் வீரராக பயன்படுத்தி வருகிறார்.

- Advertisement -

அந்த வகையிலே இந்த டி20 உலக கோப்பையிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான நடைபெற்ற பயிற்சி போட்டியின் போது தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்ட அவர் தற்போது இந்த டி20 உலககோப்பை தொடரில் இருந்தே வெளியேறியுள்ளார்.

அதன் காரணமாக அவருக்கு பதிலாக மாற்று வீரரை இந்திய அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்திய அணியில் இருந்து ஹர்ஷித் ராணா அதிகாரப்பூர்வமாக வெளியேறிய வேளையில் அவருக்கு பதிலாக மற்றொரு அனுபவ வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் இணைந்துள்ளார். முகமது சிராஜின் வருகை நிச்சயம் இந்திய அணிக்கு பலம் சேர்க்கும் என்று கூறலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : சீக்கிரம் கொண்டு வாங்க அந்த செல்லத்தை.. இறுதிப்போட்டியில் அடித்து நொறுக்கிய வைபவ் சூர்யவன்ஷி – விவரம் இதோ

ஏனெனில் கிட்டத்தட்ட பும்ராவிற்கு அடுத்து மிகப்பெரிய அனுபவம் கொண்ட வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் வேளையில் அவரை மீண்டும் இந்திய அணி டி20 போட்டிகளுக்குள் கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரிலும் அவர் இந்திய அணியுடன் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement