- Advertisement -
இந்திய கிரிக்கெட்

காலில் கட்டுடன் விளையாடிய சிராஜ்.. இவரோட கடமை உணர்ச்சிக்கு அளவே இல்ல – விவரம் இதோ

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது நேற்று முன்தினம் நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியை பெற்றது. அதோடு சேர்த்து முதல் நான்கு போட்டிகளின் முடிவில் ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் பின்தங்கியிருந்த இந்திய அணி ஐந்தாவது போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்று கணக்கிலும் சமன் செய்து அசத்தியது.

காலில் கட்டுடன் விளையாடிய சிராஜ் :

இந்த ஐந்தாவது போட்டியின் போது இந்திய அணி சார்பாக அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முதலாவது இன்னிங்ஸ்சின் போது 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸின் போது 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். அவரது இந்த சிறப்பான பந்துவீச்சு காரணமாகவே இந்திய அணி வெற்றி பெற்றதால் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

- Advertisement -

அதோடு இந்த தொடரின் 5 போட்டிகளிலும் ஓய்வின்றி விளையாடிய அவருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்து வரும் முகமது சிராஜ் பும்ரா இல்லாத போதெல்லாம் இந்திய அணியை மிகச் சிறப்பாக பந்துவீச்சில் வழி நடத்தி விக்கெட்டுகளை அள்ளி வருகிறார்.

அவரது பந்துவீச்சு தொடர்ந்து சிறப்பாக இருந்து வரும் வேளையில் இந்திய அணியின் முக்கிய வீரராகவும் மாறியுள்ளார். இந்த தொடரில் 185 ஓவர்களுக்கு மேல் வீசியுள்ள அவர் ஒவ்வொரு பந்திலும் தனது முழு திறனையும் வெளிப்படுத்தி செயல்பட்டதாக முன்னாள் வீரர்கள் பலரும் வாழ்த்தி இருந்தனர். இந்நிலையில் இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது முகமது சிராஜ் காலில் ஏற்பட்ட வலி காரணமாக கட்டு போட்டுக்கொண்டு விளையாடியதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் வெளியான தகவலின் படி : நான்காவது போட்டி முடிந்த கையோடு மாடிப்படியில் இருந்து கீழே இறங்கி வந்த போது முகமது சிராஜுக்கு சுளுக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஐந்தாவது போட்டிகளிலும் அவர் தொடர்ச்சியாக ஓவர்களை வீசியதால் கால் பகுதியில் வலியும் ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும் போட்டியின் சூழ்நிலை கருத்தில் கொண்டு வெளியே சென்ற அவர் சிறிய முதலுதவி சிகிச்சைக்கு பிறகு கட்டுப்போட்டு கொண்டு வந்து அந்த போட்டி முழுவதும் விளையாடி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : டீ கடைக்காரர் மகளின் படிப்புக்கு உதவ முன்வந்து ரிஷப் பண்ட் செய்த செயல் – குவியும் பாராட்டுகள்

ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இப்படி ஓய்வின்றி தொடர்ச்சியாக விளையாடுவது குறித்து பேசியிருந்த முகமது சிராஜ் கூறுகையில் : நாட்டுக்காக விளையாடும்போது மைதானத்திற்கு வந்து காயம் அடையதை பெரியதாக நினைக்க மாட்டேன் என்றும் இந்திய அணிக்காக செலவிடும் நேரத்தை மிகப்பெரிய கௌரவமாக கருதுவதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -