- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஹீரோன்னு சொல்லி ஆட்டோ ஓட்ட சொல்லக்கூடிய இவ்வுலகில் சாதிக்க.. தோனி இதை செய்ய சொன்னாரு.. சிராஜ்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது சிராஜ் செயல்பட்டு முதலில் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார். ஆரம்பக் காலங்களில் அவர் ரன்களை வாரி வழங்கி சுமாராக பந்து வீசினார். அதனால் “உங்களுடைய அப்பாவை போல் ஆட்டோ ஓட்டச் செல்லுங்கள்” என்ற விமர்சனங்களை சிராஜ் சமூக வலைதளங்களில் சந்தித்தார்.

அதற்காக அசராத அவர் அப்போதைய கேப்டன் விராட் கோலியின் ஆதரவுடன் நாளடைவில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால் இந்திய அணிக்காக அறிமுகமான சிராஜ் 2020 – 21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடத் தேர்வானார். அந்த சமயத்தில் அவருடைய தந்தையை இயற்கை எய்தினார்.

- Advertisement -

ஹீரோ டூ ஜீரோ:

இருப்பினும் லாக்டவுன் விதிமுறைகளால் அவரால் இந்தியாவுக்கு சென்று தம்முடைய தந்தையின் இறுதி சடங்குகளில் பங்கேற்க முடியவில்லை. அப்படிப்பட்ட வேதனையான சூழ்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான சிராஜ் 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா கோப்பையை வெல்ல உதவினார். குறிப்பாக காபாவில் நடைபெற்ற கடைசி போட்டியில் அவர் 5 விக்கெட்டுகளை எடுத்ததை மறக்க முடியாது.

அப்படியே 3 விதமான கிரிக்கெட்டிலும் ஓரளவு அசத்திய அவர் 2023 ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை தெறிக்க விட்டு இந்தியாவை சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அவை அனைத்தையும் விட சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் எந்த வேகப்பந்து வீச்சாளர்களாலும் 5 போட்டிகளில் விளையாட முடியவில்லை. ஆனால் அவர்களுக்கு விதிவிலக்காக 5 போட்டிகளிலும் விளையாடிய சிராஜ் 23 விக்கெட்டுகள் எடுத்து 2 – 2 என்ற கணக்கில் இந்தியா தொடரை சமன் செய்ய உதவினார்.

- Advertisement -

தோனியின் அட்வைஸ்:

குறிப்பாக ஓவலில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் நெருப்பாக பந்து வீசிய அவர் இந்தியாவை 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்ததை மறக்க முடியாது. இந்நிலையில் இந்திய அணிக்காக அறிமுகமான போது தோனி கொடுத்த ஆலோசனையை இப்போதும் பின்பற்றி வருவதாக சிராஜ் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியில் இணைந்த போது மற்றவர்கள் சொல்வதற்கு கவனம் கொடுக்காதே என்று எம்எஸ் தோனி என்னிடம் சொன்னார்”

இதையும் படிங்க: ஐசிசி மகளிர் உ.கோ: 88 ரன்ஸ்.. 12க்கு 12 வெற்றி.. 50 அடிக்காமலேயே பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

“ஏனெனில் நீங்கள் நன்றாக அசத்தும் போது இவ்வுலகமும் ரசிகர்களும் உங்கள் பக்கம் நின்று சிராஜ் போன்ற பவுலர் இல்லை என்று சொல்வார்கள். ஆனால் அடுத்தப் போட்டியிலேயே நீங்கள் நன்றாக அசத்தவில்லையெனில் “போய் உங்கள் அப்பாவுடன் சென்று ஆட்டோ ஓட்டுங்கள்” என்று அவர்களே சொல்வார்கள். ஒரு போட்டியில் ஹீரோவாக இருக்கும் நீங்கள் மற்றொரு ஜீரோவாவீர்கள் என்று தோனி தெரிவித்தார்” எனக் கூறினார்.

- Advertisement -