இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெற்ற ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பைத் தொடரை 2 – 2 (5) என்ற கணக்கில் சமன் செய்தது. விராட், ரோஹித் இல்லாததால் அத்தொடரில் இந்தியா படுதோல்வியைச் சந்திக்கும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் கணித்தனர். ஆனால் அத்தொடரில் ஆரம்பம் முதலே இங்கிலாந்துக்கு சவாலைக் கொடுத்த சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்தியா தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்தது.
அந்த வெற்றிக்கு பவுலிங் துறையில் முகமது சிராஜ் அதிக (23) விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றினார். குறிப்பாக ஜஸ்ப்ரித் பும்ரா பணிச்சுமை காரணமாக 2 போட்டிகளில் விளையாடவில்லை. அந்தப் போட்டிகளில் மிரட்டலாக பந்து வீசிய முகமது சிராஜ் இந்தியா 2 வெற்றிகளைப் பெறுவதற்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார்.
போலியான கோபம்:
அதிலும் குறிப்பாக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் கடைசி நாளில் நெருப்பாக பந்து வீசிய அவர் இந்தியாவை மிராக்கள் வெற்றி பெற வைத்ததை மறக்க முடியாது. அப்படி இந்தியாவின் வெற்றிக்காக போராடிய முகமது சிராஜ் உண்மையான போராளி என்று இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பாராட்டினார். மேலும் போலியான கோபத்தை மட்டுமே வெளிப்படுத்தக்கூடிய சிராஜ் நல்ல மனம் கொண்டவர் என்றும் ரூட் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜோ ரூட்டை போன்ற திறமையான நல்ல மனம் கொண்ட வீரரைப் பார்த்தால் தமக்கு புன்னகை மட்டுமே வரும் என்று சிராஜ் தெரிவித்துள்ளார். அதற்காகவே அவரைப் பார்காமல் தவிர்ப்பேன் என்றும் சிராஜ் தெரிவித்துள்ளார். மற்ற படி தமக்கும் உண்மையாக கோபம் வரும் என்று தெரிவிக்கும் சராஜ் இது பற்றி பேசியது பின்வருமாறு. “எனக்கும் கோபம் வரும். அது சீக்கிரம் குறையாது”
ரூட்டை பார்க்க மாட்டேன்:
“விக்கெட்டுகள் எடுத்த பின்பே என்னுடைய கோபம் மறையும். ஜோ ரூட் உலக தரமான பேட்ஸ்மேன். என்னை எதிர்கொள்ளும் போது அவர் எப்போதும் என்னை கோபத்துடன் பார்க்க மாட்டார். மாறாக என்னை அவர் புன்னகையுடன் பார்ப்பார். அதனால் அவருடைய முகத்தை பார்க்கும் போது எனக்கும் தாமாக புன்னகை வந்து விடும். அவரைப் பார்க்கும் போது என்னை அமைதிப்படுத்தி புன்னகைக்க வைக்கும் முதல் நபராக அவரே இருப்பார்”
இதையும் படிங்க: இந்திய அணியில் இருக்கனும்ன்னா அதுக்கெல்லாம் ஆமாம் போடனும்.. நானும் தயாரா இருக்கேன்.. சாம்சன் உருக்கம்
“எனவே இங்கிலாந்து தொடரின் போது அவரை நாம் பார்க்கக்கூடாது அல்லது அவரிடம் நாம் பேசக்கூடாது என்று முடிவெடுத்தேன். பேட்டிங் செய்கையில் எதிர்புறம் இருந்தால் கூட அல்லது மிடில் ஆஃப் திசையில் நான் ஃபீல்டிங் செய்தால் கூட அவர் என்னிடம் பேச விரும்புவார். எனவே அவரிடம் பேசாமல் நகர்ந்து செல்ல முயற்சிப்பேன்” என்று கூறினார்.



