இந்திய அணியில் இருக்கனும்ன்னா அதுக்கெல்லாம் ஆமாம் போடனும்.. நானும் தயாரா இருக்கேன்.. சாம்சன் உருக்கம்

Sanju Samson
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் 2015ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். அப்போதிலிருந்து 10 வருடமாகியும் இதுவரை அவருக்கு இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்கவில்லை. அவரும் 2021 வரை கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக விளையாடவில்லை. இருப்பினும் 2023க்குப்பின் சஞ்சு சாம்சன் ஓரளவு சிறப்பாக விளையாடத் துவங்கினார்.

அந்த சூழ்நிலையில் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் அவருக்கு டி20 கிரிக்கெட்டில் ஓப்பனிங்கில் விளையாடும் வாய்ப்பைக் கொடுத்தார். அந்த வாய்ப்பில் அபாரமாக விளையாடிய சாம்சன் 3 சதங்கள் அடித்து சாதனைகள் படைத்து மேட்ச் வின்னராக அவதரித்தார். ஆனால் தற்போது சுப்மன் கில்லை துணை கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ள கெளதம் கம்பீர் அவரை மிடில் ஆர்டரில் விளையாட வைத்துள்ளார்.

- Advertisement -

எல்லாத்தும் ஆமாம் போடணும்:

குறிப்பாக 2025 ஆசியக் கோப்பையில் ஒரு போட்டியில் சாம்சனை 8வது இடத்தில் களமிறக்குவதற்காக கௌதம் கம்பீர் காத்திருக்க வைத்தார். அத்தொடரில் கிடைத்த வாய்ப்புகளில் ஓரளவு நன்றாகவே பேட்டிங் செய்த சாம்சன் அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இத்தனைக்கும் கடைசியாக 2023ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க மண்ணில் விளையாடிய தனது கடைசி ஒருநாள் போட்டியில் சாம்சன் சதமடித்து 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா தொடரை வெல்ல உதவினர்.

இந்நிலையில் அணி நிர்வாகத்தினர் சொல்லும் அனைத்திற்கும் ஆமாம் சொன்னால் மட்டுமே இந்திய அணியில் கடினமாக உழைத்து பெற்ற வாய்ப்பைத் தக்க வைத்துக்கொள்ள முடியுமென்று சாம்சன் கூறியுள்ளார். எனவே தம்மை 9வது இடத்தில் களமிறக்கினால் அதற்கும் தயாராக இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நீங்கள் இந்திய அணியின் ஜெர்சியை அணியும் போது எதற்கும் மறுப்பு சொல்ல முடியாது”

- Advertisement -

சாம்சன் உருக்கம்:

“இந்திய அணியின் ஜெர்ஸியை பெறுவதற்காக நான் மிகவும் கடினமாக உழைத்துள்ளேன். அந்த வாய்ப்பில் உடைமாற்றும் அறையில் தொடர்ந்து இருப்பது முக்கியம். என்னுடைய நாட்டுக்காக வேலை செய்வதில் நான் பெருமையை எடுத்துக் கொள்கிறேன். அதற்காக ஒருவேளை அவர்கள் என்னை 9வது இடத்தில் பேட்டிங் செய்து, இடது கை ஸ்பின்னராக களமிறக்க விரும்பினால் அதையும் செய்ய நான் மகிழ்ச்சியுடன் தயாராக இருக்கிறேன்”

இதையும் படிங்க: 116க்கு ஆல் அவுட்.. 5க்கு 5 வெற்றி.. ஆஸியை சொந்த ஊரில் 1.5 நாளில் டபுள் ஒய்ட்வாஷ் செய்த இளம் இந்தியா

“எனவே நாட்டுக்காக எந்த வேலையை செய்ய வேண்டுமானாலும் அதை செய்வதற்கு நான் கவலைப்பட மாட்டேன்” என்று கூறினார். மொத்தத்தில் மிடில் ஆர்டரில் விளையாடுவதால் சாம்சனுக்கு இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்கவில்லை. அதனால் 2026 டி20 உலகக் கோப்பையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாகியுள்ளது.

Advertisement