இந்தியா ஜெயிச்சது 6 ரன்ஸ் வித்யாசம்.. அதுல என்னோட பங்கை நினச்சா வேற லெவல்.. சிராஜ் பேட்டி

Mohammed Siraj
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி தோற்கடித்தது ரசிகர்களுக்கு மறக்க முடியாத விருந்தாக அமைந்தது. ஏனெனில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஜூன் ஒன்பதாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வெறும் 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனால் பாகிஸ்தான் வெல்லும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

இருப்பினும் அதே பிட்ச்சை கச்சிதமாக பயன்படுத்தி நெருப்பாக செயல்பட்ட இந்திய பவுலர்கள் 20 ஓவரில் பாகிஸ்தானை 113/7 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர். அதனால் டி20 கிரிக்கெட்டில் ஆல் அவுட்டான போட்டியில் முதல் முறையாக வெற்றி பெற்று இந்தியா அற்புதமான சாதனை படைத்தது. இந்தியாவுக்கு பேட்டிங்கில் அக்சர் படேல் 20, ரிஷப் பண்ட் 43 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

சிராஜ் மகிழ்ச்சி:
அதே போல பந்து வீச்சில் ஜஸ்ப்ரித் பும்ரா 3, ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை எடுத்து மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அந்த வகையில் அனைத்து வீரர்களின் அற்புதமான பங்களிப்பால் பரம எதிரி பாகிஸ்தானை டி20 உலகக் கோப்பையில் 7வது முறையாக இந்தியா வீழ்த்தியது. இந்நிலையில் அந்தப் போட்டியில் 11வது இடத்தில் களமிறங்கிய தாம் பேட்டிங்கில் 7* (7) ரன்கள் எடுத்ததாக முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.

கடைசியில் இந்தியா வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதால் பேட்டிங்கில் தம்முடைய பங்களிப்பை நினைத்து மகிழ்ச்சியடைவதாக சிராஜ் பெருமையுடன் கூறியுள்ளார். இது பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியது பின்வருமாறு. “இதற்காக நான் நிறைய பயிற்சிகளை செய்துள்ளேன். ஐபிஎல் தொடரிலும் நிறைய பேட்டிங் பயிற்சிகளை செய்துள்ளேன். ஏனெனில் டெயில் எண்டர்கள் அடிக்கும் முக்கியமான ரன்கள் வெற்றியில் முக்கியமானது”

- Advertisement -

“இறுதியில் என்னுடைய 7 ரன்கள் எந்தளவுக்கு முக்கியமானது என்பது தெளிவாக தெரிந்தது. அந்த 7 ரன்கள் அடித்து நாம் வெற்றி பெற்றதில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தியா – பாகிஸ்தான் எப்போதுமே மிகப்பெரிய போட்டி. அந்தப் போட்டியில் இலக்கு குறைவாக இருந்ததால் பந்து வீச்சில் அதிகமாக எதையும் முயற்சிக்கக் கூடாது என்பதே என்னுடைய திட்டமாகும்”

இதையும் படிங்க: சுமாரா போட்டாலும் அடிக்க மாட்டாங்க.. ஏன்னா ஸ்டைன் மாதிரி பும்ரா இதை செஞ்சுருக்காரு.. வகார் யூனிஸ்

“மிகவும் எளிமையாக பந்து வீசி திட்டத்தை செயல்படுத்துவோம் என்று நினைத்தேன். ஒருவேளை அதில் பேட்ஸ்மேன் ரிஸ்க் எடுத்து விளையாடினால் அது நல்ல ஷாட்டாக இருக்கும். நான் தொடர்ந்து ஒரே இடத்தில் பந்து வீச முயற்சித்தேன்” என்று கூறினார். அப்படி அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா கிட்டத்தட்ட சூப்பர் 8 வாய்ப்பை உறுதி செய்துள்ளது. தொடர்ந்து இந்தியா தங்களுடைய அடுத்த போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement