- Advertisement -
இந்திய கிரிக்கெட்

திறமையான சிராஜ் உண்மையான போராளி.. அதை பொய்யா காட்டினாலும் இங்கிலாந்தில் இருக்க வேண்டிய நல்லவர்.. ரூட்

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறும் தருவாயில் இருக்கிறது. ஓவல் மைதானத்தில் நடைபெறும் அந்தப் போட்டியில் 374 ரன்களை துரத்தும் இங்கிலாந்து நான்காவது நாள் முடிவில் 336/6 ரன்கள் குவித்துள்ளது. கடைசி நாளில் இங்கிலாந்து வெற்றிக்கு 35 ரன்களும் இந்தியாவின் வெற்றிக்கு 4 விக்கெட்டுகளும் தேவைப்படுகிறது.

அதனால் அந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று 3 – 1 (5) என்ற கணக்கில் கோப்பையை வெல்வதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது. மறுபுறம் 4 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்பதால் இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது அசாத்தியமானதாக பார்க்கப்படுகிறது. முன்னதாக இத்தொடரில் ஜஸ்ப்ரித் பும்ரா கூட 3 போட்டிகளில் மட்டுமே விளையாடி கடைசி போட்டியில் தடுமாற்றமாக பவுலிங் செய்து வெளியேறினார்.

- Advertisement -

உண்மையான போராளி:

ஆனால் முகமது சிராஜ் முழுமையாக 5 போட்டிகளிலும் விளையாடி 20* விக்கெட்டுகளை எடுத்துள்ளார். தம்முடைய உடலைப் பற்றி பொருட்படுத்தாமல் இந்தியாவுக்காக முழு இதயத்துடன் விளையாடும் அவர் இத்தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராகவும் சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் முகமது சிராஜ் இந்திய அணியின் வெற்றிக்காக போராடும் உண்மையான போராளி என்று இங்கிலாந்தின் ஜோ ரூட் பாராட்டியுள்ளார்.

களத்தில் அவ்வப்போது பொய்யான கோபத்தை காட்டினாலும் உண்மையில் முகமது சிராஜ் நல்லவர் என்றும் அவர் பாராட்டியுள்ளார். அப்படிப்பட்ட திறமையான வீரருக்கு எதிராக விளையாடுவதை மகிழ்ச்சியாக எதிர்கொள்வதாக தெரிவிக்கும் ரூட் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சிராஜ் ஒரு போராளி. உண்மையான போராளியைப் போன்ற குணத்தைக் கொண்டவர். அவர் நீங்கள் உங்களுடைய அணியில் இருக்க விரும்பக்கூடிய ஒருவரைப் போன்ற குணத்தைக் கொண்டவர்”

- Advertisement -

ஜோ ரூட் புகழாரம்:

“அவர் இந்தியாவுக்காக தன்னுடைய அனைத்தையும் கொடுக்கிறார். அதற்காக அவரை பாராட்ட வேண்டும். அவர் கிரிக்கெட்டை அணுகும் விதம், சில நேரங்களில் பொய்யான கோபத்தைக் காட்டும் விதம் ஆகியவற்றைப் பார்க்கிறேன். இருப்பினும் அவர் மிகவும் நல்லவர் என்று உங்களால் சொல்ல முடியும். மிகவும் திறனுள்ள வீரரான அவர் எதிர்கொள்வதற்கு கடினமானவர். அவர் இவ்வளவு விக்கெட்டுகளை எடுக்க 2 காரணம் இருக்கிறது”

இதையும் படிங்க: ரிஷப் பண்ட் மாதிரி எங்காளும் இந்தியாவை தோற்கடிக்க வருவாரு.. இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அறிவிப்பு

“ஒன்று வேலை நெறிமுறை, மற்றொன்று அவருடைய திறன் அளவு. முகத்தில் பெரிய புன்னகையுடன் தன்னுடைய அணிக்காக அனைத்தையும் கொடுக்கும் சிராஜ் போன்றவருக்கு எதிராக நான் விளையாடுவதை விரும்புகிறேன். ஒரு ரசிகன் பார்ப்பது போன்று எதையும் உண்மையில் விரும்பவில்லை. எந்த இளம் வீரருக்கும் அது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு” என்று கூறினார்.

- Advertisement -